சிதுமிண மாணவ உதவி
சிசுமிணு கல்விப் புலமைப் பரிசில்
விசேட வேலைத்திட்டம்
கல்விப் புலமைப் பரிசில் வழங்கப்படுவது யாருக்கு?
வடமேல் மாகாணத்தினுள் நிரந்தரமாக வசிக்கின்ற குடும்ப வருமானம் 3000.00 ரூபாவிற்கு குறைந்த
· விதவை குடும்பங்களில் கல்வி கற்கின்ற பிள்ளைகள்
· சிதறிய குடும்பங்களில் கல்வி கற்கின்ற பிள்ளைகள்
· தாய் அல்லது தந்தை பாரதூரமான நோய்க்கு உள்ளாகியுள்ள குடும்பங்களில் கல்வி கற்கின்ற பிள்ளைகள்
· தாய் அல்லது தந்தை அங்கவீன நிலைக்கு உள்ளாகியுள்ள குடும்பங்களில் கல்வி கற்கின்ற பிள்ளைகள்
(மேற்கூறப்பட்ட வகைகளுக்கு உரிய குடும்பங்களில் கல்வி கற்கின்ற பிள்ளைகள் மத்தியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிள்ளைகளுக்காக மாத்திரம் கீழே கூறப்பட்டுள்ள புலமைப் பரிசில் வழங்கப்படும்)
· நீங்கள் மேற்கூறப்பட்ட தகைமைகளை உடையவராயின் உங்களுக்குரிய பிரதேச செயலாளர் பிரிவில் சமூக சேவை உத்தியோகத்தரை சந்தித்து தேவையினை அவருக்கு கூறவும்.
· சிசுமிண புலமைப் பரிசில் விண்ணப்பப் படிவத்தை அவரிடத்தில் பெற்றுக் கொள்ளவும்.
· அதில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களை பூர்த்தி செய்யவும்.
· கிராம உத்தியோகத்தரின் சிபாரிசும் மாணவர் அல்லது மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலையின் அதிபரின் சிபாரிசனையும் பெற்றுக் கொண்டு விண்ணப்பப் படிவத்தில் இணைத்து உரிய சமூக சேவை உத்தியோகத்தரிடத்தில் பொறுப்படைக்கவும்.
புலமைப் பரிசில் உதவி
· 1 – 9 வரையிலான ஒரு மாணவருக்கு 400.00 ரூபா (மாதாந்தம்)
· 10 – 11 வரையிலான ஒரு மாணவருக்கு 1000.00 ரூபா (மாதாந்தம்)
· 12 – 13 வரையிலான ஒரு மாணவருக்கு 1000.00 ரூபா (மாதாந்தம்)
· பல்கழைக் கழக மாணவருக்கு 1000.00 ரூபா (மாதாந்தம்)
· குடும்பத்தில் கல்வி கற்கும் ஒரு மாணவனுக்கு அதிகமாயின் செலுத்த முடிந்த ஆக்க கூடிய தொகை 1500.00 ரூபா (சுற்று நிருபப்படி செலுத்த வேண்டும்)
விண்ணப்பப் படிவத்திற்குரியவற்றை நேரில் சென்று பரிசீலிப்பின் பின் செலுத்த வேண்டிய தொகை சிபாரிசு செய்தல் பிரிவின் சமூக சேவை உத்தியோகத்தரினால் செய்யப்படும்.