அங்கவீனர்களுக்காக வழங்கும் சேவைகள்
அங்கவீனர்களுக்கான அங்கவீன புணர் வாழ்வு பிரேரணை திட்டம்
நோக்கம் – பொருளாதார அபிவிருத்தியிற்காக அங்கவீனம் தடையாக கருதாமல் சாதனையாக எடுத்துக் கொள்ளல்.
தகுதியுடையோர்
· தற்போது பொது நிதி உதவிக் கொடுப்பனவு , தமது அங்கவீன பிள்ளைகள் பாதுகாத்துக் கொள்வதற்காக ஏதாவதொரு தொழிலில் ஈடுபட முடியாத, பாடசாலை போகும் வயதில் உள்ள பிள்ளைகள் உள்ள 50 வயதிற்கு குறைந்த சுருசுருப்பான ஏதாவதொரு வேலையில் ஈடுபட முடிந்த விதவை பெண்ணாக இருத்தல்.
· அங்கவீன பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்வதற்காக ஏதாவதொரு வேலையில் ஈடுபட முடியாத அல்லது பிள்ளைகளின் அங்கவீனம் என்று கணவனினால கைவிடப்பட்ட பெண்ணாக இருத்தல்.
· தற்போது பொது நிதி உதவிக் கொடுப்பனவு பெறும் என்றாலும் குடும்பத்தை பாதுகாப்பதற்காக ஏதாவதொரு வேலையில் ஈடுபட முடிந்த சுருசுருப்பான அங்கவீன 60 வயதிற்கு குறைந்தவராக இருத்தல்.
· உண்மையாகவே தனக்கு வருமானம் பெற்றுக் கொள்வதற்கு முடியும் என்று எண்ணுகின்றதும் குறைந்த வளங்களை உபயோகித்து செய்ய முடிந்த சிறு வியாபார அலுவல் பற்றிய கருத்துள்ள மாதாந்த வருமானம் 2000.00 ரூபாவிற்கு குறைந்த அங்கவீனதாக இருத்தல்.
உதவிக் கொடுப்பனவு வழற்கும் செயற் திட்டம்
· மேற்கூறப்பட்ட பொது நிதி புணர் வாழ்வு பிரேரணைத் திட்டத்தின் கீழ் காட்டப்பட்டுள்ளவாறு
· 10000.00 ரூபா தொகையினை இரண்டு தவணைகளில் செலுத்தப்படும்.
· சிறு வியாபார, மிருக வளர்ப்பு, ஆடைத் தைத்தல்,போன்ற பிரதேசத்திற்கு வசதியான கைத் தொழிலினை இதற்காக தேர்ந்தெடுக்கலாம்.
மாகாண சமூக சேவை திணைக்களத்தினால் அங்கவீனவர்களுக்காக வழங்கப்படும் சேவைகள்.
நோக்கம் – அங்கவீனவர்களின் அங்கவீன தன்மையை குறைப்பதற்காகவும் சமூகத்தில் மற்றவர்களைப் போன்று தாமும் நடவடிக்கைகளில் ஈடுபட இயலுமை மற்றும் திறமையை வெளிக்காட்டுவதற்காக.
வழங்கப்படும் உபகரணம்
· சக்கர நாற்காலிகள்
· முச்சக்கர சைக்கிள்
· முடவன் கோல்
· ஊன்று கோல்
· கெலிபர்ஸ் (விசேட சப்பாத்து)
· செயற்கை கை, கால்
· மூக்கு கண்ணாடி
· கண் வில்லை
· செவிபுலன் கருவி
வழங்கப்படும் முறை
· மாதாந்த வருமானம் 3000.00 ரூபாவை விட குறைந்த வருமான முடைய அங்கவீனருக்கு இந்த உதவி பெறுவதற்கு தகுதியுடையவராவார்.
· அங்கவீனர் தமது நோய் நிலையினால் எதிர்பார்க்கப்பட்ட உபகரணம் பற்றி வைத்திய சிபாரிசுடன் அறிக்கை ஒன்றினை கட்டாயமாக வழங்க வேண்டும்.
1. மூக்கு கண்ணாடிக்காக தேவையான வில்லையின் அளவினை குறிப்பிட்டு கண் பரிசீலிப்பு அறிக்கை
2. கண் வில்லைக்காக தேவையான வில்லையின் அளவினை குறிப்பிட்டு கண் பரிசீலிப்பு அறிக்கையுடன் வைத்தியசாலையிற்கு உட்பட வேண்டிய திகதியை குறிப்பிடப்பட்ட கடிதம்
3. கண் உபகரணத்திற்காக கண் பரிசீலிப்பு அறிக்கை
4. மற்றைய உபகரணத்திற்காக அந்த ஒவ்வொன்றிற்கும் பொறுந்தும் வைத்திய சிபாரிசுடனான அறிக்கை
அங்கவீன நபருக்கு தேவையான உபகரணம் பற்றிய மேற்கூறப்பட்ட சிபாரிசுடனான அறிக்கையுடன் கிராம உத்தியோகத்தரிற்கு கிடைக்கும் கோரிக்கைக்கு அவரின் சிபாரிசுடன் பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு அனுப்புதல்.
· பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு கிடைக்கும் கோரிக்கையை சிபாரிசிற்காக சமூக சேவை உத்தியோகத்தருக்கு அனுப்புதல்.
· சமூக சேவை உத்தியோகத்தர் அங்கவீன நபருக்கு அவரின் கோரிக்கையினை பரசீலித்த பின் வமா/சசே/03(1) படிவத்தில் தமது சிபாரிசினை பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு அனுப்புதல்.
· பிரதேச செயலாளரின் சிபாரிசுடன் விண்ணப்பப் படிவம் பிரதேச செயலாளர் அலுவலகத்தினால் சமூக சேவை மாகாண பணிப்பாளர் அலுவலகத்திற்கு அனுப்புதல்.
· சமூக சேவை மாகாண பணிப்பாளர் அலுவலகத்தினால் உரிய உபகரணம் உரிய சரியானவரிடத்தில் ஒப்படைப்பதற்காக உரிய ஆவணங்களை அனுப்புதல்.
· உரிய உபகரணம் உரிய சரியானவரிடத்தில் ஒப்படைப்பத்து அவர் அதனை பெற்றுக் கொண்டது பற்றி பற்றுச் சீட்டினை பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு சமூக சேவை மாகாண பணிப்பாளர் அலுவலகத்திற்கு அனுப்புதல்.
· உரிய நபருக்கு வழங்கப்படும் உபகரணம் முறையாக உபயோகிப்பதா என்பது பற்றி ச.சே.உ. னால் பரீட்சித்து உறுதிப்படுத்தல் வேண்டும்.
· பொதுவாக உபயோகப்படுத்த முடிந்த வகைகளில் உபகரணங்களை உரியவர் உபயோகப்படுத்தாவிடின் மீள்பெறுவதற்கும் அதனை பிரதேசத்தில் உள்ள இதைப் போன்ற தேவையுடைய நபர் ஒருவருக்கு சமூக சேவை மாகாண பணிப்பாளர் அலுவலகத்தில் பின்பு அனுமதியினை பெறும் வரை வழங்க முடியும்.
வேறு சேவைகள்
· சுய தொழில் உதவி
· பிறப்பிலே அங்கவீனமுடைய பிள்ளைகளுக்காக திறன்களை மேம்படுத்தும் நிலையம்
· அங்கவீனமுடைய பிள்ளைகளுக்காக ஆரம்ப தொழில் பயிற்சி நிலையம்
· வைத்தியசாலை அண்மித்த உளவியல் சுகாதார பிணி ஆய்வு வேலைத்திட்டம்.
· உளவியல் சுகாதார பிணி ஆய்வு வேலைத் திட்டத்தினுடனான திறமை அபிவிருத்தி /தொழில் பயிற்சி
· பாதுகாப்பு மனைக்கு அனுப்புதல்
· விடுதிக்காக கொண்டு நடாத்தலும் நிதி உதவி செலுத்தலும்
· உதவி பெறும் பாடசாலைக்காக அங்கவீன பிள்ளைகளை அனுப்புதல் கொண்டு நடாத்தலும் நிதி உதவி செலுத்தலும்
· தொழில் பயிற்சிக்காக அனுப்புதல்
· உட்பிரவேச வசதியை பெற்றுக் கொள்வதற்கு உதவுதல்
சுய தொழில் உதவி
மேற் கூறப்பட்ட (05) ஆம் வருமான ஆக்கபூர்வ நடவடிக்கைக்காக வழங்கப்படும் உதவித் தலைப்பின் கீழ் அங்கவீனமுடைய நபர்களுக்காக அங்கவீன புணர் வாழ்விற்கான பிரேரணையின் மூலம் விடயங்களை தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
உளவியல் சுகாதார பிணி ஆய்வு வேலைத்திட்டம்.
நோக்கம் - உளவியல் சுகாதார பிணி ஆய்வினால் மருத்துவம் பெறுபவர்களின் உளவியல் மேம்பாடு.
செயல் திட்டம்
· உளவியல் சுகாதார பிணி ஆய்வினால் ச.சே.உ. இற்கு அனுப்பும் மருத்துவம் பெறும் குடும்பத்தின் நிலையை அறிமுகம் செய்துக் கொள்ளல்.
· மருத்துவம் பெறுபவருக்கு குடும்பத்தினுள் உகந்த சூழலினை ஏற்படுத்துவதற்கு உதவுதல்
· தேவையாயின் பொது நிதி உதவி/ புணர் வாழ்வு உதவி பெற்றுக் கொடுத்தல்
· தொடர்ந்து மேற்பார்வை
உளவியல் சுகாதார பிணி ஆய்வு வேலைத் திட்டத்தினுடனான திறமை அபிவிருத்தி /தொழில் பயிற்சி
நோக்கம் - மருத்துவம் பெறுபவர்களுக்கு சமூகத்தில் சுயமாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளல்.
செயல் திட்டம்
· மருத்துவம் பெறுபவர்களின் மனநிலையினைப் பொறுத்து பிணி ஆய்வுனூடாக உரிய பயிற்சிக்காக அனுப்புதல்.
· அதற்கு தேவையான ஆரம்ப வசதி பிணி ஆய்வு மூலம் பெற்றுக் கொடுத்தல்
· பிணி ஆய்வு மூலம் பயிற்சி பெறுபவருக்கு சுய தொழில் உதவி பெற்றுக் கொடுத்தல்
அங்கவீனர்களை இல்லங்களுக்கு உட்படுத்தல்
நோக்கம் – உதவியற்ற அங்கவீனர்களுக்கு வாழ்வதற்கு உகந்த சூழலினை ஏற்படுத்தி பாதுகாப்பும் போசனை வழங்குதல்
இல்லங்களுக்கு உட்படுத்தலுக்கான தகைமைகள்
· பலதரப்பட்ட கஷ்டங்களினால் குடும்பங்களினால் கொண்டு நடாத்த முடியாத/ பெற்றோர், பாதுகாவலர் அற்ற 35 வயதிற்கு குறைந்த அங்கவீனராக இருத்தல்.
செயல் திட்டம்
· அவ்வாறான ஒருவர் பற்றி வசிக்கும் பிரதேசத்தின் கிராம உத்தியாகத்தருக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்க முடியும்.
இல்லத்திற்கு உற்படுத்தப்பட்டவரின் அங்கவீன நிலையையும் குடும்ப விபரங்களையும் கோரிக்கையை பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு கிராம உத்தியாகத்தரினால் அனுப்புதல்
· உரிய கோரிக்கை பற்றி ச.சே.உ. தனிப்பட்ட முறையில் பரிசீலித்து வமசசே03(2) படிவத்தினை பிரதேச செயலாளருக்கு அறிவித்தல்.
பிரதேச செயலாளரின் சிபாரிசுடன் உரிய பத்திரத்தினை சமூக சேவை மாகாண பணிப்பாளருக்கு அனுப்புதல் (விடய பொறுப்புள்ள உத்தியோகத்தரினால்)
· விடுதி வசதியினை பெற்றுக் கொடுப்பதற்காக இட வசதியுள்ள இல்லத்திற்கு பிள்ளைகளை அனுப்புதல் சமூக சேவை மாகாண பணிப்பாளர் அலுவலகத்தினால் செய்யப்படும்.
· இல்லத்திற்குற்படுத்திய பின் பொது நிதி உதவி பெற்றுக் கொண்டிருப்பின் அச் செலுத்தலினை இடை நிறுத்தப்படும்.
பதிவிறக்கம்
வடமேல் மாகாணத்தில் பலதரப்பட்ட காரணங்களினால் அங்கவீன நிலைக்குற்பட்ட குறைந்த வருமானம் உள்ளவர்களுக்காக வடமேல் மாகாண சமூக சேவை திணைக்களத்தினால் கீழ் காணப்படும் உபகரணங்களை இலவசமாக பெற்றுக் கொடுக்கப்படும்.
1. செயற்கை கால்
2. செயற்கை கை
3. சக்கர நாற்காலி
i. பிள்ளைகளுக்கான சக்கர நாற்காலி
ii. வயது வந்தோருக்கான சக்கர நாற்காலி
iii. கொமட் சக்கர நாற்காலி
4. டிரைசிக்கிள்
i. பிள்ளைகளுக்கான டிரைசிகிள்
ii. வயது வந்தோருக்கான டிரைசிகிள்
5. செவி புலன் உபகரணம்
i. காதின் பின் பகுதியில் பொறுத்தும்
ii. சட்டைப் பையில் பொறுத்தும்
6. ஊன்று கோள் முடவன் கோள்
7. வௌ’ளைப் பிரம்பு
8. கெலிபஸ் சப்பாத்து
9. மூக்கு கண்ணாடி
மேற்கூறப்பட்ட உபகரணங்கள் தேவைப்பட்டவர்கள் அந்த உபகரணங்களை பெற்றுக் கொள்வத்காக பின் பற்ற வேண்டிய நடைமுறைகள்.
1. வடமேல் மாகாண சமூக சேவை திணைக்களத்தில் வமா/சசே/03(1) விண்ணப்பபடிவத்தினை உங்களுக்குரிய பிரதேச செயலாளர் அலுவலகத்தில் உள்ள மாகாண சமூக சேவை உத்தியோகத்தரின் அல்லது கிராம உத்தியோகத்தரிடம் பெற்றுக் கொள்ளலாம்.
2. மேற் கூறப்பட்ட விண்ணப்பபடிவத்தின் இலக்கம் 612 கீழ் விண்ணப்பதாரி பற்றிய விபரத்தை பூர்த்தி செய்து உங்களுக்குரிய கிராம உத்தியோகத்தர் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளல்
3. உங்களது தேவை பற்றி கோரிக்கை கடிதம் ஒன்றினை சமர்பித்தல்.
4. உங்களது அங்கவீன நிலையை உறுதிப்படுத்துவதற்கு அரச வைத்தியர் ஒருவரினால் பெற்றுக் கொள்ளப்பட்ட சான்றிதழினை சமர்பித்தல்.
5. செவி புலன் உபகரணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு தேவைப்படின் உங்களது செவி புலன் பற்றிய புலன் வரைபடம் ஒன்றினை சமர்பித்தல்.
6. கிராம உத்தியோகத்தரினால் சான்றுபடுத்தப்பட்ட வமா/சசே/03(1) விண்ணப்பபடிவத்தினையும் கோரிக்கை கடிதமும் வைத்தியச் சான்றிதழினையும் உங்களது பிரதேச செயலாளர் அலுவலகத்தில் உள்ள மாகாண சமூக சேவை உத்தியோகத்தர் அல்லது வேலைத்திட்ட உதவியாளர் (சமூக சேவை) உத்தியோகத்தரிடத்தல் பொறுப்படைத்தல்.
சேவை பெறுனரினது மேற்கூறப்பட்ட செயலின் பின் உரிய சேவைகளை பெற்றுக் கொள்வது வரையிலான செயற்பாடுகள்
1. உங்களால் சமூக சேவை உத்தியோகத்தரிடத்தில் பெற்றுக் கொடுக்கப்படும் விண்ணப்பப் படிவம் பரிசீலித்த பின் உரிய துறையில் பரிசீலனை மூலம் சமர்பிக்கப்பட்டுள்ள தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ளவும் விண்ணப்பப் படிவத்தின் இலக்கம் 2 – 5 வரையிலான பிரிவுகளை பூர்த்தி செய்துக் கொள்ளல்.
2. விண்ணப்பதாரியின் கோரிக்கை உண்மையானதாகின் சமூக சேவை உத்தியோகத்தரியின் சிபரிசினை பெற்றுக் கொடுத்தல்
3. பிரதேச செயலாளரின் சிபாரிசுடன் உரிய தகவலும் விண்ணப்பப் படிவம் சமூக சேவை திணைக்களத்திற்கு பெற்றுக் கொடுத்தல்
4. உங்களால் சமர்பிக்கப்படும் விண்ணப்பப் படிவம் நிலைய சமூக சேவை உத்தியோகத்தரிடனது சிபரிசிற்கு முன்வைத்தல்
5. உரிய விண்ணப்பப் படிவம் சமூக சேவை மாகாண பணிப்பாளரின் அனுமதிக்காக சமர்பித்தல்.
6. அதற்காக மாகாண பணிப்பாளரின் அனுமதி கிடைக்கப் பெற்றிருப்பின் உங்களுக்கு தேவையான அங்கவீன உபகரணத்தை உங்களுக்குரிய பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு பெற்றுக் கொடுக்கப்படும்.
பதிவிறக்கம்
பிள்ளைகளை சேர்த்துக் கொள்ளும் முறை
விசேட தேவையுள்ள பிள்ளைகள் வடமேல் மாகாணத்தில் 19 மத்திய நிலையங்களுக்காக சேர்த்துக் கொள்ளும் போது 02 வயதிலிருந்தே ஆரம்பிக்கப்படுகின்றது. இங்கே பிள்ளைகளை அறிமுகம் செய்துக் கொள்ளுதல் பிரதேச சுகாதார சேவை அலுவலகங்களில் சேவை செய்யும் குடும்ப நல உத்தியோகத்தரினூடாக அறிமுகம் செய்துக் கொண்டு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் சமூக சேவை உத்தியோகத்தர், வேலைத்திட்ட உதவியாளர் (சமூக சேவை) உத்தியோகத்தர் ஊடாக கீழ் காணப்படும் பிள்ளைகள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
01. புத்திக் குறைபாடுள்ள பிள்ளைகள்
02. நரம்புத் தளர்ச்சி உள்ள பிள்ளைகள்
03. ஒடிசம் நிலையில் உள்ள பிள்ளைகள்
04. காது கேளாத பிள்ளைகள்
05. கல்வி கற்க முடியாத பிள்ளைகள்
06. காக்காய் வலிப்பு நோயினால் அவதிப்படும் பிள்ளைகள்
07. பலவித குறைபாடுகளையுடைய பிள்ளைகள்
08. கண் பார்வையற்ற பிள்ளைகள்
அங்கு முதலாவது, பிள்ளையும் பொறுப்பாளரும் நேர்முகப் பரீடசை மூலம் விபரம் பெற்றுக் கொள்ளப்பட்டு புத்தி வளர்ச்சி குறிப்பின் மூலம் பிள்ளையின் கல்வி நடவடிக்கைக்காக தகுதியான நிலையை தீர்மானிக்கப்படும்.
பிள்ளைகள் முறையான பாடசாலையில் முதலாம் தரத்திற்கு வந்தது போல் அமைத்துக் கொள்ளவது முதலாவதாக செய்யப்படுவதுடன் அவ்வாறு உற்படுத்த முடியாத பிள்ளைகளை 6 வயதின் பின் 16 வயது வரை ஆரம்ப தொழில் பயிற்சி பாடநெறிக்காக அனுப்பப்படுவர். அங்கு நிகழ்வது பிள்ளையின் செயற்பாடுகளை அபிவிருத்தி செய்வதோடு சமூக பண்பாடுகளை பழக்குதல். அதன் பின் 16 வயது தொடக்கம் 18 வயது வரை முறையான தொழில் பயிற்சி பாடநெறிக்காக அனுப்பப்படுவர். பின் 2 ஆண்டுகள் வரை பிள்ளை வளர்ச்சியடையும் தேர்ச்சிகளுக்கு உரிய திணைக்களத்தின் கீழ் பெற்றுக் கொடுக்கப்படும் சுய தொழில் உதவி வேலைத்திட்டத்தினை இணைத்து உதவித் தொகை பெற்றுக் கொடுத்து சமூக சேவை உத்தியோகத்தர் ஊடாக கண்கானிக்கப்படுவர்,
பிள்ளைகளுக்காக பெற்றுக் கொடுக்கப்படும் கல்வி 02 - 06 வயது
பிள்ளைகளுக்காக புணர்வாழ்வு நடவடிக்கை ஆரம்பிக்கும் போது ஒவ்வொரு பிள்ளைக்கும் ஏற்ற வகையில் கல்வி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கீழ் குறிப்பிட்டவாறு கல்வி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
Ø தன்னை பற்றியும் தன் சூழலைப் பற்றியும் அறிவினை பெற்றுக் கொடுத்தல்.
Ø மென்மையான செயற்பாடுகளை அபிவிருத்தி
Ø மாதிரி செயற்பாடுகளை அபிவிருத்தி
Ø நிறத்தை அறிந்துக் கொள்ளல்
Ø தனிப்பட்ட சுகாதார சம்பந்தமான தகவல்
Ø சாப்பாட்டு மேசையின் நற் பழக்க வழக்கம்
Ø வீட்டு நடவடிக்கை
Ø நிதி நடவடிக்கை
Ø போக்குவரத்து நடவடிக்கை
Ø பொழுது போக்கு நடவடிக்கை
Ø சமூக தொடர்பாடல்
Ø சமய ஒழுக்கப்பண்பாடுகள்
Ø மொழி திறனும் தொழில் தேர்ச்சி
ஆரம்ப தொழில் அபிவிருத்தி நடவடிக்கை 06 - 16 வயது
முறையான பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு முடியாத பிள்ளைகளை இந்த மத்திய நிலையத்தில் தரித்து வைத்து ஆரம்ப தொழில் நடவடிக்கை, அதாவது பிள்ளையின் தேர்ச்சி அபிவிருத்தி அடைவதற்கு தேவையான செயற்பாடுகளை அபிவிருத்தி செய்யப்படும். இங்கு பிள்ளைகளின் தேர்ச்சி அபிவிருத்தி அடைவதற்கு அதிக காலம் எடுக்கும். பிள்ளைகளை சமூகமயப்படுத்துவதற்கும் சுகாதார நிலைமை சம்பந்தமாகவும் தொழில் பயிற்சி மட்டம் பொறுந்தும் பிள்ளையாக இந்த கால வரையரையினுள் மாற்றுவதற்கு கல்வி நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும்.
தொழில் தேர்ச்சி அபிவிருத்தி செய்தல் 16 – 18 வயது
ஆரம்ப கல்வியினை பெற்ற பிள்ளை இயக்கத் திறனை அபிவிருத்தி செய்துக் கொண்டு உபகரணங்களை உபயோகித்து உற்பத்தி செய்வதற்கு ஈடுபடுத்தல் இங்கு மேற்கொள்ளப்படுகின்றது. 2 வருடம் வரை பாடநெறியை மேற்கொண்ட பின்னர் அவர்களின் தேர்ச்சிக்குரியவாறு எதிர்வரும் செயற்பாடுகளை செய்வதற்கு சுய உதவி முறைக்கு முன்வைக்கப்படுவார்கள்.
விசேட தேர்ச்சி அபிவிருத்தியினை செய்வதற்கு உரிய நிலையில் உள்ள பிள்ளைகள் பிரதேச தொழில் நுட்ப கல்லூரியும், சீதுவ புணரமைப்பு மத்திய நிலையமும், கெடவல லெவுல மத்திய நிலையத்திற்கும் முன்வைக்கப்படுவார்கள். பிள்ளைகள் ஏதாவதொரு வருமானத்தை தேடிக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு உள்வாங்கப்படுவர்.
கீழ் காணப்படும் தொழில் தேர்ச்சிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
01. கைப்பணி நிர்மாணம்
02. தையல் பாடநெறி
03. விளக்கு திரி திரித்தல்
04. விளக்குமாறு, தும்புத்தடி செய்தல்
05. மணி மாலை கோர்த்தல்
06. துணிப்பை நிர்மாணம்
07. கணினி பாடநெறி
08. கால் துடைப்பகம் (கயிறு, துணி)
09. பூச்சாடி
10. வீட்டுத் தோட்ட பயிரிடல்
11. அழங்காரப் பொருட்கள் நிர்மாணம்
12. சித்திரம்
விசேட வேலைத்திட்டம்
விசேட தேவையுடைய பிள்ளைகள் மிகவும் விருப்பம் தெரிவிக்கும் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் சில பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது வரையில் பிள்ளைகள் மிகவும் சுறுசுறுப்பாகவும் புணர்வாழ்வு செயற்பாடுகளில் விரைவாக்குவதற்கு இந்த வேலைத் திட்டங்கள் உதவியுள்ளது என்று விளங்குகின்றது.
1. சங்கீத வேலைத் திட்டங்கள்
2. நாடன வேலைத் திட்டங்கள்
3. சித்திரம்
4. கணினி வேலைத் திட்டங்கள்
விசேட தேவையுடைய பிள்ளையின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் சேவைகள்
· பெற்றோர்களின் உளப்பாங்கை அபிவிருத்தி செய்தல்
· உளவியல் ஆலோசனைகளை வழங்கல்
· வீட்டு உதவி வழங்கல் (உதவிக்காக வீடுகள், அமைச்சின் வீடமைப்பு வேலைத்திட்டத்திற்கு முன்வைத்தல்)
· புலமைப் பரிசில் பெற்றுக் கொடுத்தல்
· குழு உற்பத்தியில் ஈபடுத்தல்
· வீடுகளில் இருக்கும் பிள்ளைகளுக்கு புணர்வாழ்வு வேலைத்திட்டங்களை செய்தல் (வீடுகளுக்கு சென்று அறிவுறுத்தல்)
மத்திய நிலையங்களுக்காக பௌதீகவளங்களை வழங்குதல்
· பிள்ளைகளுக்கு கற்பதற்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் பெற்றுக் கொடுத்தல்
· சீருடை பெற்றுக் கொடுத்தல்
· விளையாட்டு முற்றத்திற்காக அனைத்துப் உபகரணங்களையும் பெற்றுக் கொடுத்தல்
· கட்டமைப்பு நடவடிக்கை
· எல்லா உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல்
வேறு நிறுவனங்களுடன் தொடர்பு
· ஜெய்க்கா மற்றும் காய்க்கா நிறுவனங்களினால் சுயமாக நடவடிக்கை மேற்கொள்ளவதற்காக 2 வருடங்களுக்கு உடற்பயிற்சி மருத்துவரை தொடர்பு கொள்ளல்.
· பிரதேச சுகாதார சேவை நிறுவனத்தை தொடர்பு கொள்ளல்.
· முறையான பாடசாலைகளை தொடர்பு கொள்ளல்.
பதிவிறக்கம்