பொது உதவி
(1) பொது மக்களுக்கான மாதாந்த உதவிக் கொடுப்பனவு
நோக்கம் – பேணிக்காப்போரின் புறக்கணிப்பினால் அல்லது தமது வாழ்க்கையை கொண்டு நடாத்துவதற்கு இயலாமல் போனதால் அல்லது அன்றாடம் தேவைப்படும் ஆரம்ப தேவைகளை பெற்றுக் கொள்வதற்கு வேண்டிய வருமான நிலையற்ற மக்களுக்கு மாதாந்த உதவிக் கொடுப்பனவு கிடைக்காது விடின் இன்னும் அநாதை நிலைக்கு உள்ளாகும் என்பதனால் அந் நிலையில் இருந்து விடுவிப்பதற்கும் அச் சந்தர்ப்பத்தை குறைத்தலும்/தடுத்தலும்
மாதாந்தம் பொது நிதி உதவி பெறுவதற்கு தகுதியுள்ளவர்கள்
அரசினால் எவ்வித உதவியும் கிடைக்காத அனாதைகளும் பாதுகாப்பற்றோரும் இந்த உதவிக்கு உற்படுவர்
I. நோயாளர்கள், வயோதிபர்கள், உடல் உள ரீதியில் குறைபாடுள்ளவர்கள் அவர்களின் உதவியில் உள்ளவர்கள் (60 வயதிற்கு மேற்பட்ட ஆண்களும் 55 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் வயோதிபர் என்று கருதப்படுவர்)
II. தமது பிள்ளைகளை பேணி காப்பதற்காக அல்லது உடல் சீரற்ற காரணத்தினால் அல்லது தனதும் தனது பிள்ளைகளின் வாழ்க்கை நிலையை சீராக கொண்டு செல்வதற்காக தொழிலில் ஈடுபட முடியாத, அவரில் தங்கி இருக்கும் சிறு பிள்ளைகள் உள்ள குறைந்த வருமானம் பெறும், கணவனை இழந்த தாய்மார்கள், கணவனினால் கைவிடப்பட்டு சிறு பிள்ளைகள் உள்ள குறைந்த வருமானம் பெறும் தாய்மார்கள்.
III. கணவன் சுகம் செய்ய முடியாத நோயினால் அவதிப்படுவதனால் அல்லது சிறையில் உள்ளதனால் அவரின் உதவி பெற முடியாததனால் இவரில் தங்கி வாழ்வோரில் சிறு பிள்ளைகள், கவனிப்பாரற்ற தாய்மார்கள்.;
IV. 16 வயதிற்கு குறைந்த அநாதை பிள்ளைகள் மற்றும் பெற்றோரின் உதவி கிடைக்காத பிள்ளைகள் மற்றும் உடல் உள ஊனமுற்ற பிள்ளைகள்.
தகுதி அற்றோர்
ஓய்வூதியம் பெறுபவர் அல்லது முப்படையில் சேவையில் இருந்து மரணமடைந்தவர்களுக்காக சம்பளம் பெறும் தாய்மார்கள், தந்தைகள், கணவனை இழந்தவள், பிள்ளைகளின் நலநோன்பு நிதி உதவித் தொகைப் பெற்றவர்கள் அல்லது வேறு வருமானம் வழிமுறைகள் உள்ளவர்கள்.
பொது மக்களுக்கான உதவி செலுத்துவதற்கான எல்லைகள்
மாதத்திற்கு
தனி ஒருவருக்கு ரூ.250.00
தலைவர் உற்பட அவரில் தங்கி உள்ள 1 ஒரு குடும்பத்திற்கு ரூ.300.00
தலைவர் உற்பட அவரில் தங்கி உள்ள 2 ஒரு குடும்பத்திற்கு ரூ.350.00
தலைவர் உற்பட அவரில் தங்கி உள்ள 3 ஒரு குடும்பத்திற்கு ரூ.400.00
தலைவர் உற்பட அவரில் தங்கி உள்ள 4 ஒரு குடும்பத்திற்கு ரூ.450.00
தலைவர் உற்பட அவரில் தங்கி உள்ள 5 ஒரு குடும்பத்திற்கு ரூ.500.00
தலைவர் உற்பட அவரில் தங்கி உள்ள 5 அதிக குடும்பத்திற்கு ரூ.500.00
(குறைந்தது 250.00 ரூபா கூடியது 500.00 ரூபா)
பொது மக்களுக்கான உதவித் தொகை செலுத்துதல்
நடவடிக்கை செயல் முறை
I. தமது கோரிக்கையினை தமது பிரதேச கிராம உத்தியோகத்தருக்கு அல்லது பிரதேச் செயலாளர் அலுவலகத்திற்கு தமது தேவையினை முன்மொழிந்து கோரிக்கையினை முன்வைத்தல்.
II. கிராம உத்தியோகத்தரினால் வ.மா.ச.சே.ம. ஆ01 படிவம் கோரிக்கையாளருக்கு வழங்குதல். (விண்ணப்பதாரியிற்கு படிவத்தினை பூர்த்தி செய்ய முடியாதுவிடின் அதற்காக கிராம உத்தியோகத்தர் உதவுதல் வேண்டும்)
III. விண்ணப்பதாரியினால் பூர்த்தி செய்யப்பட்ட மேற்கூறப்பட்ட படிவம் கிராம உத்தியோகத்தருக்கு கிடைத்த பின் கிராம உத்தியோகத்தரியினால், அதனை தமது படிவத்தில் பதிந்துக் கொண்டு விண்ணப்பதாரியினால் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் வ.மா.ச. சே.ம. ஆ02 படிவத்தினை பூர்த்தி செய்யது தமது சிபாரிசுடன் பிரதேச செயலாளருக்கு பொறுப்படைத்தல் வேண்டும்.
IV. விடயப் பொறுப்புடைய உத்தியோகத்தரினால் பொது உதவி விண்ணப்பப் படிவ ஆவணத்தில் (சசே.பி12) என்ற படிவத்தில் விபரித்து சமூக சேவை உத்தியோகத்தரின் சிபாரிசிற்காக அவரிடத்தில் பொறுப்படைத்தல் வேண்டும்.
V. சமூக சேவை உத்தியோகத்தர் உரிய நபரை சந்தித்து குடும்ப தகவல்கள் படிவத்தில் காட்டப்பட்டுள்ளவை சம்பந்தமாக பரிசீலித்து தமது சிபாரிசுடன் வமா/ச.சே./01 படிவத்தினை பிரதேச செயலாளருக்கு பொறுப்படைத்தல் வேண்டும்.
VI. விடயப் பொறுப்புடைய உத்தியோகத்தரினால் உரிய பிரதேச செயலாளருக்கு சமர்பித்து அனுமதியினை பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
VII. அனுமதிக்கப்பட்ட கோரிக்கையினை உரிய அட்டவணையை உதவுத் தொகை கிடைப்பதற்கு தகுதி உள்ளவர்களின் ஆவணத்திற்கு (ச.சே.பி.34) உற்படுத்தல்.
VIII. ஒதுக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டுத் தொகையில் மீதியினை கவனத்தில் கொண்டு பொது நிதிய செலுத்தல் ஆவணத்திற்கு பெயரை உற்படுத்தல்)
IX. தபால் அலுவலகம் மூலம் நிதி பெற்றுக் கொள்வதற்காக கிராம உத்தியோகத்தர் அல்லது சமூக சேவை உத்தியோகத்தரினால் சான்றுபடுத்தப்பட்ட உதவித் தொகை பெறுபவரின் மாதிரி கையொப்பத்தினை உடைய பத்திரத்திரத்தினை (வமா/ச.சே./05) பிரதேச செயலாளரின் கையொப்பத்துடன் விண்ணப்பதாரியிற்கு வழங்குதல் (சமூக சேவை உத்தியோகத்தரினால்)
இங்கு பின்பற்ற வேண்டிய வழிவகைகள்
· உப தபாற் அலுவலகத்தின் படி உதவி பெறுநரின் பெயரை குறிப்பிடப்பட்டுள்ள சம்பள ஏடு (வமாசசே/9 மற்றும் 9ஏ) மற்றும் சம்பள ஆவணத்தின் சுருக்கம் (எஸ்எஸ்பி10) அமைத்தல் (மாதாந்தம் 25ஆந் திகதியாகும் போது பூர்த்தி செய்யப்பட வேண்டியதாகும்)
· சம்பள ஆவணத்தின் சுருக்கம் (எஸ்எஸ்பி10) மற்றும் மாவட்ட கணக்காளர் (தபால்) பெயருக்கு அமைக்கப்பட்ட வவுச்சர் பத்திரத்தினை உரிய மாதத்தில் 25 ஆந் திகதியாகும் போது பூர்த்தி செய்து கணக்கு பிரிவிற்கு பொறுப்படைத்தல்.
· உரிய மாதத்தில் நிதிக்காக காசோலை, சம்பள ஆவணத்தின் சுருக்கம் ஆகியவற்றுடன் அந்த மாதத்தினுள் தபால் திணைக்களத்தின் மாவட்ட கணக்காளருக்கு அனுப்புதல். (உத- ஜனவரி மாதத்திற்கு உரிய தொகையினை குறைந்த பட்சம் ஜனவரி மாதம் 28 திகதியாவது) (விடய பொறுப்புள்ள உத்தியோகத்தரினால்)
· சம்பள பதிவு (வமாசசே/9) படிவம், செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட்ட தொகையினை பதிவு செய்யப்பட்ட சம்பள அட்டவணை பற்றி சான்றிதழ் (வமாசசே/6) உடன் செலுத்தப்படாத கொடுப்பனவு பற்றிய தபால் நிலைய பொறுப்பாளரின் மாதாந்த அறிக்கை, உரிய மாதத்தின் 30 ஆந் திகதியாகும் போது உப தபால் அலுவலகத்திற்கு அனுப்புதல் (விடய பொறுப்புள்ள உத்தியோகத்தரினால்) இங்கு விசேடமாக கவனிக்க வேண்டியது (பிறக்கும் மாதத்தின் முதலாவது வாரத்தினுள் குறைந்த பட்சம் 6 ஆந் திகதிக்கு உதவி பெறுநருக்கு பணம் பெற்றுக் கொள்ளும் வகையில் மற்றும் செலுத்தப்படாத கொடுப்பனவு பற்றிய விபரம் விரைவில் பெற்றுக் கொள்ள முடிந்த வகையில்)
· செலுத்தல் சுருக்கம் (எஸ்எஸ்பி10) உப தபாற் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட அனுமதிக்கப்பட்ட தொகையினை குறிப்பிடப்பட்டுள்ள சம்பள ஆவணம் பற்றிய சான்றிதழ் (வமாசசே/06), ச.சே.பி.29 மற்றும் குறுக்கரிக்கை பிறக்கும் மாதத்தில் 05 ஆந் திகதிக்கு முன் மாகாண சமூக சேவை பணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும். (விடய பொறுப்புள்ள உத்தியோகத்தரினால்) (பொது உதவி செலுத்தல் கணனி மயப்படுத்தி உள்ளதனால் இந்த அறிக்கை அவசரமாக பெற்றுக் கொள்ள முடியும்)
மீள் கிடைக்கும் ஆவணமும் காசோலை பற்றிய நடவடிக்கை
i. செலுத்தி முடிந்த ஆவணம்
· பணம் செலுத்திய பின் கிடைக்கும் சம்பள் குறிப்புப் பத்திரத்தினை பரிசீலித்து உதவி பெறுபவரின் பெயர் எதிரில் உரிய மாதத்தின் செலுத்தப்படாத கொடுப்பனவு சிவப்பு நிறத்தினால் வட்டமிட்டு செலுத்தும் படிவத்தில் குறிப்பிடல்.
· தொடர்ந்து மூன்று வாரங்கள் உதவுத் தொகை பெறாதுவிடின் அவரின் செலுத்துகை தற்காலீகமாக இடைநிறுத்தப்படுவதுடன் அந்த காலத்தினுள் மீண்டும் கோரிக்கைவிடுக்காதுவிடின் செலுத்தும் படிவத்தில் இருந்து பெயரை நீக்கல்.
· பரீட்சிக்கப்பட்ட செலுத்தி முடிந்த சம்பள படிவம் அதற்குரிய செலுத்தல் வவுச்சர்களுக்கு இணைத்தல் வேண்டும்.
ii. காசோலை
· செலுத்தப்படாத கொடுப்பனவிற்காக கிடைக்கும் காசோலைகள் கணக்கிற்கு வரவில் வைக்கப்படும்.
· நடைமுறையில் உள்ள வருடத்திற்குரிய மாத்திற்காக செலுத்தப்படாத கொடுப்பனவாக கிடைக்கும் தொகையின் பெறுமதி செலவு தலைப்பிற்க்கு பற்றுவைத்து அந்த வருடத்தில் செலுத்துவதற்காக உபயோகப்படுத்த முடியும். (திசம்பர் 31 ஆந் திகதிக்கு முன் கிடைக்கும்)
· முன்னைய வருடத்தின் மாதங்களுக்கு உரிய கிடைக்கும் செலுத்தப்படாத கொடுப்பனவு அரச வருமானத்திற்கு வரவில்வைத்தல் வேண்டும். அவை தற்போதைய வருடத்தில் செலுத்துவதற்காக உபயோகப்படுத்த முடியாது.
அட்டையில் புதுப்பித்தலும் இரத்துச் செய்தல்
· வேறு எந்தக் காரணத்திற்காகவும் இரத்துச் செய்யப்படின் பொது உதவுத் தொகை அட்டையின் செல்லுபடியாகும் காலம் 03 வருடமாகும்.
· செல்லுபடியாகும் காலம் காலாவதியாகும் போது அடுத்த மாதத்தின் உதவுத் தொகை காலம் தாழ்த்தாது பெற்றுக் கொள்ள முடிந்த வகையில் அட்டையினை புதுப்பித்துக் கொடுத்தல் வேண்டும்.
· கிராம உத்தியோகத்தரினால் கொண்டு நடாத்தும் பொது உதவி அட்டவணையில் உள்ளவாறு அட்டையின் செல்லுபடியாகும் காலம் காலாவதியாவதற்கு எல்லா இரண்டு மாதங்களுக்கு முன் தமது பிரிவில் புதுப்பிப்பதற்குள்ள அட்டை உரித்துள்ளவர்களை அறிந்துக் கொண்டு உரிய தினத்திற்கு முன் உரிய தொகையனை காலம் தாழ்த்தாது கிடைக்கும் வண்ணம் அட்டையை புதுப்பித்துக் கொடுப்பதற்கு உதவி பெறுபவரை அறிமுகம் செய்வதற்கு கிராம உத்தியோகத்தருக்கு இயலும்.
· அட்டையினை புதுப்பித்து தருமாறு கிராம உத்தியோகத்தரிடத்தில் கிடைக்கும் கோரிக்கையின் படி அதனை பரிசீலிக்கும் அவர், குடும்பத்தின் வருமான நிலையில் உயர்வு அல்லது பிள்ளைகள் உதவி பெறும் எல்லையை மீறி இருப்பின் உரிய திருத்தத்துடன் தமது பரிசீலித்து பிரதேச செயலாளரிடத்தில் எழுத்து மூலம் சமர்ப்பிப்பார். உதவி பெறுபவர் அல்லது கையொப்பத்தை உறுதிப்படுத்திய புதிய அட்டையை இரத்து செய்வதற்காக தமது பொறுப்பிற்கு எடுத்த பழைய அட்டையை அதனுடன் பிரதேச செயலாளரிடத்தில் சமர்ப்பித்தல் வேண்டும்.
· அதன் படி ச.சே.உ. இடத்தில் விதப்புரையினை பெறும் பிரதேச செயலாளர் பழைய அட்டையை இரத்துச் செய்து புதிய அட்டையை வழங்குவதினை அனுமதிப்பார். (தேவையாயின் திருத்தத்துடன்)
· பொது உதவி ஆவணத்திலும் இந்த புதுப்பித்தல் பற்றி குறிக்கப்படும்.(விடயப் பொறுப்புடைய உத்தியோகத்தரினால்)
· வசிப்பிடத்தினை விட்டுச் செல்லல் அல்லது மரணமடைந்த காரணத்தினால் அட்டையினை திருப்பி பொறுப்பேற்று இரத்துச் செய்யப்படும். உரிய செயற்திட்டம் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது.
· வசிப்பிடத்தை பிரதேசத்தினை விட்டுச் செல்லல்
1. பொது உதவி செலுத்தும் அட்டையினை மாகாணத்தின் வெளியில் மாற்றம் செய்யப்படமாட்டாது.
உதவி பெறும் ஒருவர் மாகாணத்தை விட்டுச் செல்வாராயின் கோரிக்கை ஒன்றை சமர்ப்பிப்பாராயின் அவர் வசித்த கிராம பிரதேசத்தினை விட்டுச் சென்றுள்ளார் என்று பிரதேச செயலாளரின் சான்றிதழுடன் கடிதம் ஒன்றினை கிராம உத்தியோகத்தருக்கு வழங்க முடியும். அதனுடன் அட்டையினை மீள் பெற்றுக் கொண்டு பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு பொறுப்படைத்தல் வேண்டும்.
2. மாகாணத்தினுள் பிரதேச செயலாளர் பிரிவிற்கிடையில் அட்டையினை மாற்ற முடியும். அப்போது,
i. உரியவர் வசித்த கிராம பிரதேசத்தினை விட்டுச் சென்றது பற்றி கிராம உத்தியோகத்தரினால் வழங்கப்பட்ட பிரதேச செயலாளரின் சான்றிதழ் படுத்தப்பட்ட கடிதம்
ii. அவர் புதிதாக வசிப்பதற்கு வருகைத்தந்துள்ளது பற்றி அந்த பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தரினால் வழங்கப்பட்ட பிரதேச செயலாளரின் சான்றிதழ் படுத்தப்பட்ட கடிதம், மற்றும்
iii. உதவித் தொகையினை மாற்றித் தருமாறு விபரங்களடங்கிய கோரிக்கை உரிய அட்டையுடன் பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு பொறுப் படைத்தல் வேண்டும்.
iv. சமூக சேவை உத்தியோகத்தர் அந்த விபரங்களை பரிசீலித்து தமது சிபாரிசினை பிரதேச செயலாளரின் அனுமதியிற்கு சமர்ப்பித்தல் வேண்டும்.
புதிய அட்டையொன்றினை வழங்கும் போது நடைமுறைப்படுத்தப்படும் வழிமுறைகள்.
· மரணமடைதல்
பொது உதவி பெறும் ஒருவர் மரணமடைந்தார் என்று அறிந்தவுடன்
· அவர் தனிப்பட்டவராயின்
· அந்த மாதத்திலேயே உரிய அட்டையை கிராம உத்தியோகத்தரினால் பொறுப்பேற்று அதனை இரத்துச் செய்வதற்காக பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு பொறுப் படைத்தல் வேண்டும்.
· குடும்பத்தின் தலைவராயின்
· மரணமடைந்த பொது உதவி பெறுபவரில் தங்கி வாழ்ந்த மனைவி அல்லது 16 வயதிற்கு குறைந்த பிள்ளைகள் இருப்பின் கிராம உத்தியோகத்தரினால் பொறுப்பேற்ற அட்டையினை அந்த உறுப்புரிமையாளரிற்காக திருத்திய மைக்கப்பட்டு வழங்குவதற்காக தமது சிபாரிசினை பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு பொறுப்படைத்தல் வேண்டும்.
சமூக சேவை உத்தியோகத்தர் உரியவர்களை சந்தித்து குடும்பத்தின் தகவல்களையும் கிராம உத்தியோகத்தரினால் வழங்கப்படும் தகவல் சம்பந்தமாக பரிசீலித்து தமது சிபாரிசுடன் புதிய உதவியாளரின் பெயர் மற்றும் தொகை அடங்கிய திருத்த அட்டையினை பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு பொறுப் படைத்தல் வேண்டும்.
அதன் பின் விடயப் பொறுப்புடைய உத்தியோகத்தரினால் மரணமடைந்த உதவி பெற்றவரின் பெயரினை செலுத்தும் ஆவணத்தில் இருந்து நீக்குவதற்கு/ திருத்திய புதிய உதவி பெறுநரின் பெயர் பழைய இலக்கத்தின் கீழ் உற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். (திருத்துவதனை சிவப்பு நிறத்தினால் காட்டவும்)
முக்கியம் எல்லா திருத்தமும் பி.செ/உ.பி.செ. அவர்களின் சுருக்கமான கையொப்பத்தினை இட்டு சான்றுபடுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.
ஆட்சேபத்திற்குரிய
· பிச்சைக் கேட்டு உண்பதனை தமது வாழ்க்கையாக கொண்டுள்ளவர்களுக்கு பொது உதவித் தொகை வழங்க முடியாது.
· ஓய்வூதியம் அல்லது நல நோன்பு நிதி பெறுபவர் அல்லது முப்படையில் இருந்து மரணமடைந்தவர்களின் பிள்ளைகள்/ கணவனுக்காக அவரின் சம்பளம் அல்லது திறைச்சேரியினால் ஏதாவதொரு கொடுப்பனவினை பெறுபவர்களுக்காகவும் வேறு புணர்வாழ்விற்கான கொடுப்பனவு மற்றும் உதவி பெறுனருக்காக பொது உதவித் தொகை வழங்க முடியாது. வருமான அறிக்கை வழங்கும் போது கிராம உத்தியோகத்தரின் விசேட கவனத்தினை செலுத்த வேண்டும்.
· உதவி பெறுபவர் ஏதாவதொரு நோயினால் அவதிப்படுபவராக இருந்து உரிய தொகையினை பெறுவதற்கு தபால் அலுவலகத்திற்கு செல்ல முடியாதவராக இருந்தால் (வீட்டில் இருந்தால் மாத்திரம்) பிரதிநிதி அத்தாட்சிப் பத்திரத்தினை கிராம உத்தியோகத்தர் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டு உரிய தபால் அலுவலகத்திற்கு சமர்பித்தபின் உரிய பிரதிநிதிக்கு பணத்தினை பெற்றுக் கொள்ளலாம். (வ.ம.ச.சே.7 படிவம்)
· பிரதிநிதி அத்தாட்சிப் பத்திரத்தினை வழங்கள் தொடர்ந்து செய்யலாகாது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் பொது நிதி உதவியினை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பதாரியின் சுய எண்ணப்படி நிரந்தரமாக பிரதிநிதி ஒருவரை நியமிக்கலாம்.
பொது நிதி உதவியினை பெறுபவர்களை மீண்டும் நுணுகி கவனித்தல்
· எந்த வருடமும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வாழ்கின்ற பொது நிதி உதவி பெறுனர்கள் பற்றியும் நுணுகி ஆராய்தல் வேண்டும். விசேடமாக 60 வயதிற்கு மேற்பட்ட உதவி பெறுனர்களும் 16 வயதிற்கு குறைந்த குடும்பங்கள் சம்பந்தமாக மிகவும் அவதானிப்பு தேவை. வேறுபாட்டினை அறிவிப்பதற்காக மீண்டும் அவதானிப்பு படிவத்தினை (வ.ம.ச.சே.1ஆ) உபயோகிக்க முடியும். அந்த அறிக்கை மூலம் சமர்ப்பிக்கப்படும் தகவல் சமூக சேவை உத்தியோகத்தரினால் பிரதேச செயலாளரின் அனுமதிக்காக சமர்ப்பித்தல் வேண்டும்.
நிலுவைத் தொகை
· தொடர்ந்து மூன்று தவணைகள் உதவித் தொகை பெறாதுவிடின் அவர்களுக்கான செலுத்துதலினை தற்காலீகமாக இடைநிறுத்துவதுடன் அந்த காலத்தினுள் மீண்டும் கோராது விட்டால் அந்த கொடுப்பனவு பூரணமாகவே நிறுத்தப்படும். முன்னைய மாதம் பெற்றுக் கொள்ளாத உதவித் தொகை அடுத்த மாதத்தில் நிலுவைத் தொகையாக பெற்றுக் கொள்ள முடியாது.
· வைத்தியசாலையில் தங்கி இருந்த காலத்திற்காக நிதி வழங்கப்பட மாட்டாது. அந்த காலத்திற்காக அவருக்காக அரசு செலவு பொறுப்பினை ஏற்கும்.
கண் பார்வையற்ற வீட்டுத் தொழில் நுட்பவியாளர்களுக்காக பொது நிதி உதவி செலுத்தல்.
· சீதுவ மற்றும் வத்தேகம தொழில் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சியின பெற்று வீட்டு தொழில் நுட்ப சேவையில் உள்ள இற்றைவரை 300.00 ரூபா மாதாந்த கொடுப்பனவினை பெற்ற, பொது நிதி உதவி பெறுவதற்கு தகுதுயுள்ள, கண் பார்வையற்ற வீட்டுத் தொழில் நுட்பவியாளர்களுக்காக 2013.02.01 ஆந் திகதி தொடக்கம் அந்த கொடுப்பனவு 1500.00 ரூபா வரையில் அதிகரித்து செலுத்தப்படுகின்றது.
· உதவி பெறுவதற்கு தகுதியுள்ளவர்கள் பற்றிய அட்டவணை சமூக சேவைப் பணிப்பாளரினால் இதற்கு முன் அனுப்பப்பட்டுள்ளதுடன் அதன்படி 1500.00 ரூபா கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளது.
· செலுத்தும் திட்டம் பொது நிதி உதவி செலுத்தல் முறைக்கு ஒத்தாகும்.
அடையாளத்தை, பயிற்சியும் பயிற்சிக் காலம் பற்றி விபரம் சீதுவ தொழில் பயிற்சி நிறுவனத்தில் அதிகாரி இடம் பெற்றுக் கொள்ளலாம்.
பதிவிறக்கம்