நோய்க்கான உதவி

நோய்க்கான உதவித் திட்டம்

நோக்கம் ; நோய் நிலைக் காரணமாக பொருளாதார நிலை மோசமானதால் நோயாளரின் உடல் சுகாதாரம் மற்றும் போசாக்கு நிலை மற்றும் அவரில் தங்கியுள்ளவர்களை கொண்டு நடாத்துவதற்கு முடியாத நிலைக்குற்பட்டவர்களுக்காக உதவியை வழங்கள்.

நோய்க்காக செலுத்தப்படும் உதவி

1. காச நோய்க்கான உதவி

2. தொழு நோய்க்கான உதவி

3. புற்று நோய்க்கான உதவி

4. தெலசீமியா நோய்க்கான உதவி

5. விசேட வைத்திய உதவி

நோய்க்கான உதவி பெற தகுதியுள்ளோர்

· உரிய நோயினால் அவதிப்படுவது பற்றி உறுதிப்படுத்தும் வைத்தியச்  சான்றிதழ்

· வருமானம் 3000.00 ரூபாவிலும் குறைவாக இருத்தல்

· நோய் ஏற்பட்டதனால் பணம் தேடிக் கொள்ள முடியாதவராக இருத்தலும் தொடர்ந்து வெற்றிகரமாக மருத்துவம் செய்வதற்கு நிதி தேவையுள்ளவராக இருத்தல்.

· அரச திறைச்சேரியின் செலவுத் தலைப்பிலிருந்து உதவி  பெறாதவராக இருத்தல்.

நோய்க்கான உதவி செலுத்தும் முறை​

1. வெளி நோயாளர்களுக்காக ஒரு மாதத்திற்கு செலுத்தல்

(காச, தொழு நோய்க்கான உதவிக்காக)

i. குடும்பத்தின் தலைவர் வெளி நோயாளராயின் ரூ. 450.00

ii. முதலாவது தங்கியிருப்பவர் (மனைவி)       ரூ. 100.00

iii. வேறு தங்கியிருக்கும் ஒருவருக்கு           ரூ.  50.00 வண்ணம்

செலுத்த முடிந்த ஆகக்  கூடிய உதவித் தொகை ரூ. 700.00

தெலசீமியா நோயாளர்களுக்காக மாத்திரம் 1000.00 ரூபா

சிபாரிசு செய்யப்பட்ட விசேட நோய்க்காக நோயாளர்களுக்காக மாத்திரம் 500.00 ரூபாவும் செலுத்தப்படும். புற்று நோய்க்கான உதவி 750.00 ரூபா தொடக்கம் 1000.00 ரூபா வரையாகும்.

· நோய்க்கான உதவித் தொகை பெறும் குடும்பத்தின் தலைவரை தவிர்த்து வேறு உறுப்பினர்கள்  மேற்கூறப்பட்ட நோயினால் அவதிப்படுபவராக இருப்பின், வைத்தியச் சான்றிதழ்  மூலம் அது பற்றி உறுதிப்படுத்துவதனால் அவர்/அவள் ஒருவருக்காக கொடுப்பனவுப் பெற உரிமை உண்டு.

· நோய்க்கான உதவித் தொகை பெறும் குடும்பத்தின் உறுப்பினர்கள் பொது உதவிப் பெறுவதற்கான தகுதியற்றவர்.

· சிகிச்சைப் பெறும் காலதினுள் வைத்தியர்களினால் தடுக்கப்பட்டிருப் பவைகளில்  இருந்து தவிர்ந்துக் கொள்ளல் வேண்டும்.

2. உள்வாரி நோயாளர்களுக்காக ஒரு மாதத்திற்கு செலுத்தல்

i. நோயாளர்களுக்காக செலுத்தப்படமாட்டாது

ii. முதலாவது தங்கியிருப்பவருக்கு                ரூ.100.00

iii. வேறு தங்கியிருப்பவர்களுக்கு             ரூ.50.00  வண்ணம்

செலுத்த முடிந்த ஆகக்  கூடிய உதவித் தொகை ரூ. 300.00

· நோய்க்கான உதவித் தொகைக்கு உற்படும் பொது நிதி உதவிப் பெறுபவரின் பொது நிதி உதவி, நோய்க்கான உதவித் தொகைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் வரை இடைநிறுத்தப்படும்.

· வைத்திய உதவி செலுத்தப்படுமாயின் வைத்தியச் சான்றிதழ் சிபாரிசு செய்யப்பட்ட காலத்திற்காக மாத்திரம்

காச நோய்க்காக தொடர்ந்து 3 மாதம்

தொழு நோய்க்காக தொடர்ந்து 6 மாதம்

நோயின் தன்மையின் படி வைத்தியச் சான்றிதழ் சிபாரிசு காலம் நீடிப்பதற்கான சந்தர்ப்பம் உண்டு.  அதன் போது சமூக சேவை உத்தியோகத்தரின் மேற்பார்வையின் படி பிரதேச செயலாளரின் அனுமதியுடன் உரிய காலத்திற்காக மீண்டும் வைத்திய உதவி செலுத்தப்படுவது தங்கி இருப்பவர் என்று கருதப்படுவது

i. மனைவி (பிரதான தங்கி இருப்பவர்)

ii. 16 வயதிற்கு குறைந்த பிள்ளைகள்

iii. குடும்பம் மற்றும் வாழ்கின்ற கணவனின் அல்லது மனைவியின்

பெற்றோர்.

iv. குடும்பத்துடன் வாழ்கின்ற உடல்/உள குறைபாடுள்ள வயது வந்த

பிள்ளைகள்

மேற்கூறப்பட்ட iii, iv உள்ளவர்களின் கீழ் உள்ளவர்களால் சென்ற ஆறு மாதத்தினுள் உரிய குடும்பத்துடன் வாழாதுவிடின் இந்த தொகைக்காக தங்கியிருப்போர் என்று கருதப்படமாட்டாது.

கணவன் குணப்படுத்த முடியாத நோயினால் அவதிப்படுபவராக இருந்தால், சிறைச்சாலைக்குற்பட்டிருத்தல் போன்ற காரணங்களுக்காக கணவனின் உதவியற்ற போது அந்த பெண்கள் மற்றும் தாரமிளந்தவர்களை குடும்பத்தின்  தலைவர் என்று கருதலாம்.

நோய்க்கான உதவி  தொகை செலுத்துதல்

நடைமுறைக்கான திட்டம்

1. நோயாளர் உரிய வைத்தியச் ச​ன்றிதழுடன் உதவித் தொகை கோரும் கடிதம் அவர்/அவள் உரிய கிராம உத்தியோகத்தரிடம் பொறுப்படைத்தல்.

உரிய வைத்தியச் சான்றிதழ்

· காச நோய் சம்பந்தமாக மார்பு சிகிச்சைப் பிரிவு பொறுப்புடைய வைத்திய உத்தியோகத்தரினால் எஸ்எஸ்/ரிபீ/எம்1 படிவத்துடன் வழங்கும் வைத்தியச் சான்றிதழ்

· தொழு நோய் சம்பந்தமாக தொழு நோய் கட்டுப்பாட்டு பிரிவின் பொது சுகாதார பரிசோதகரினால் வழங்கும் வைத்தியச் சான்றிதழ்

· புற்று நோய் சம்பந்தமாக மஹரகம புற்று நோய் வைத்திய சாலை, கண்டி, குருணாகல் மற்றும் அநுராதபுர வைத்திய சாலைகளில்  புற்று நோய் சிகிச்சைப் பிரிவு பொறுப்புடைய வைத்திய உத்தியோகத்தரினால் வழங்கப்படும் பொது சுற்று நிருபம் 1604, 1989.08.16 ஆந் திகதியில் வழங்கப்பட்டுள்ள வைத்தியச் சான்றிதழ்

2. கிராம சேவை உத்தியோகத்தர் நோயாளரின்  கோரிக்கையையும் வைத்தியச் சான்றிதழினையும் பிரதேச செயலாளரிற்கு சமர்ப்பித்தல்.

3. சமர்ப்பித்த வைத்தியச் சான்றிதழ் உரிய வைத்தியச் சான்றிதழ் அல்லாதுவிடின் சரியான வைத்தியச் சான்றிதழினை சமர்பிக்குமாறும் அதனுடன் விண்ணப்பப் பத்திரத்தினை பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு சமர்ப்பித்தல்.

4. பிரதேச செயலாளர் அலுவலகத்தில் விடயப் பொறுப்புடைய உத்தியோகத்தர் அந்த விண்ணப்பத்தினை உரிய ஆவணத்தில் குறித்துக் கொண்டு பிரதேச செயலாளரின் கட்டளைப்படி சிபாரிசு செய்யப்பட்ட அறிக்கையினை பெற்றுக் கொள்வதற்காக சமூக சேவை உத்தியோகத்தரிற்கு பொறுப்படைத்தல்.

5. சமூக சேவை உத்தியோகத்தரினால் உரிய நோயாளியின் வீட்டிற்கு  வருகைத் தந்து தகவல்களைப் பெற்று தமது சிபாரிசுடனான அறிக்கையை (காச நோய் மற்றும் தொழு நோய்களுக்கான உதவிக்காக வ.ப.ச.சே1 படிவத்திலும்  புற்று நோய் மற்றும் தௌசீமியா நோய்களுக்கான உதவிக்காக வ.ப.ச.சே2 படிவத்திலும்  விசேட நோய்க்காக சமூக நலன்புரி அமைச்சினால் வழங்கப்பட்ட படிவத்திலும்) பிரதேச செயலாளரிற்கு ​ சமர்ப்பித்தல்.

6. காச நோய் மற்றும் தொழு நோய்களுக்காக சமூக சேவை உத்தியோகத்தரின் சிபாரிசுடனான அறிக்கைக்காக பிரதேச செயலாளரின் அனுமதியினை பெறல்.

7. மீதி உள்ள நிதித் தொகையினைக் கருத்தில் கொண்டு விண்ணப்பதாரியின் பெயரினை உரிய அட்டவணையில் உற்படுத்தல்.

8. அட்டை உதவி பெறுபவருக்கு வழங்களும் தபால் அலுவலகம் மூலம் செலுத்தல் நடவடிக்கை பிரதேச செயலகத்தினால் செயற்படுத்தப்படும்.

9. நிதி ஒதுக்கீடு இல்லாதுவிடின் உடனடியாக சமூக சேவை மாகாண அலுவலகத்தை தொடர்பு கொண்டு ஒதுக்கீட்டினை பெற்றுக் கொள்ள வேண்டும். (நோய் உதவிக்காக தேவையான அளவில் ஒதுக்கீடு வழங்கப்படும்.

10. புற்று நோய் ,தௌசீமியா நோய் மற்றும் விசேட நோய்களுக்கான உதவி தேவையான வகையில் மாகாண சமூக சேவை அலுவலகத்தினால் செலுத்துவதனால் அவற்றிற்கு உரிய கோரிக்கை சம்பந்தமாக பிரதேச செயலாளரின் சிபாரிசுடன் வ.ப.ச.சே2 படிவத்தில் சமூக சேவை உத்தியோகத்தரின் அறிக்கை, வைத்திய சான்றிதழ் மற்றும் கையொப்பம் உறுதிப்படுத்தப்பட்ட அட்டையுடன் சமூக சேவை மாகாண பணிப்பாளரிடம் அனுப்புதல்.

11. அனுமதிக்கப்பட்ட செலுத்தல் அட்டை உதவி பெறுபவருக்கும் நிதி, உரிய தபால் அலுவலகத்திற்கும் அனுப்புதல் மாகாண சமூக சேவை அலுவலகத்தில் நிறைவேற்றப்படும். அது பற்றி நோயாளிக்கு உரிய பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு அறிவிக்கப்படும்.  தற்போது பொது நிதி உதவி பெறுவாராயின் அதனை இரத்துச் செய்வதற்கு ஆலோசனை  பிரதேச செயலாளரிடம் அனுப்பப்படும்.

12. அனைத்து செலுத்தல் அட்டைகள் (வ.ப.ச.சே5 படிவம்) 3 வருடங்களுக்கு செல்லுபடியாவதுடன் பொது நிதி உதவி, காச,தொழு நோய்கான அட்டை பிரதேச செயலாளர் அலுவலகத்தினூடாக புதுப்பிக்கப்படும்.  புற்று நோய் ,தௌசீமியா நோய் மற்றும் விசேட நோய்களுக்கான உதவிக்கான அட்டைகள் சமூக சேவை மாகாண பணிப்பாளர் அலுவலத்தினூடாக புதுப்பிக்கப்படும்.

13. உதவி பெறுபவர்கள்  உயிருடன் வாழ்வது பற்றியும் தொடர்ந்தும் சிகிச்சை பெறுகின்றார் என்றும் சமூக சேவை உத்தியோகத்தர் உறுதிப்படுத்தவதுடன் சமூக சேவை உத்தியோகத்தரினால் நிலைய பரிசீலனையின் பின் அதனை புதுப்பித்தலினை சிபாரிசு செய்தல் வேண்டும்.

 

14. சமூக சேவை உத்தியோகத்தரினால் 6 மாதங்களுக்கு ஒருமுறை பெறுவோர் சம்பந்தமாக தேடிப்பார்த்தல் வேண்டும்.


பதிவிறக்கம்

 

  1. Application 09
  2. Application 10

 

Last Update :-

1st Sep 2023