அமைய உதவி
அமைய உதவிக் கொடுப்பனவு
நோக்கம் ; அமைய உதவிக் கொடுப்பனவுகளினால் எதிர்பார்க்கப்படுவது திடீர் அனர்த்தத்தின் போது விபத்திற்கு, அநாதை நிலைக்கு உள்ளாவதை தடுப்பது மட்டுமேயன்றி வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதல்ல.
நபர் ஒருவருக்கு கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத, சிறு அளவில் நடக்கும் இயற்கை விபத்தினால் தான் வசிக்கும் ஒரே வீட்டிற்கு ஏற்படும் நட்டங்கள் அல்லது அழிவின் போது விபத்திற்கு அநாதை நிலைக்கு உள்ளாவதை தடுப்பது அல்லது அவ்வாறான சந்தர்ப்பத்தின் போது வாழ்வாதார கைத்தொழில்காக உபயோகப்படுத்தப்படும் ஆயுதம் அல்லது உபகரணங்கள் அழியும் போது அவற்றை பெற்றுக் கொள்வதற்காக செலுத்தும் உதவிக் கொடுப்பனவாகும்.
உதா- காற்றினால் வீடு விழல்
மழையினால் வீடு உடைந்து விழல்
தீயினால் கூரை எரிதல்
மரம் உடைந்து விழுவதால் வீடு உடைந்து விழல்
செலுத்தும் உதவித் தொகை
· அழிவின் தன்மையை பொறுத்து மதிப்பீட்டின் படி வீடொன்றிற்காக 10000.00 ரூபா வரையிலான தொகையினை பெற்றுக் கொடுக்கப்படும். (3 தவணைகளில்)
· வீடொன்றிற்கு ஏற்பட்டுள்ள அழிவின் பெறுமதியினை மதிப்பீடும் போது மரத் தளபாடம், துணி மணிகள் மற்றும் வீட்டுபகரணங்களுக்கு ஏற்படும் அழிவின் பெறுமதியை கவனத்தில் கொள்ளலாகாது.
· சமயலறை உபகரணங்களை விலைக்கு வாங்கியதற்கான பற்றுச் சீட்டு சமர்ப்பித்த பின் 500.00 ரூபாவிற்கு குறைவாகவும், தொழில் உபகரணங்களை விலைக்கு வாங்கியதற்கான பற்றுச் சீட்டு சமர்ப்பித்த பின் 1000 ரூபாவிற்கு குறைவாகவும் செலுத்த முடியும்.
· வீட்டிற்கு ஏற்பட்டுள்ள நட்டத்தினை ஈடு செய்வது என்று கருதப்படமாட்டாது. ஒருவருக்கு ஏற்பட்ட நட்டத்தினை குறைப்பதற்காக அவருக்கு உதவி செய்வதே இதனால் எதிர்பார்க்கப்படும்.
விண்ணப்பிப்பதற்கான தகைமை
· உடைந்து விழுந்த வீடு விண்ணப்பதாரியிற்கு உரித்துடையது என்றும் அவர் அந்த வீட்டில் வசிப்பவர் என்னும்.
· உடைந்த வீட்டை தவிர வேறு வீடு இல்லை என்பது பற்றி
· மாதாந்த வருமானம் 3000.00 ரூபாவிற்கு குறைவு என்பது பற்றி
· வீட்டை கட்டமைப்பதற்கு உதவி கிடைக்காதுவிடின் அநாதை நிலைக்கு உள்ளாக வேண்டி ஏற்டும் என்பது பற்றி
உதவி செலுத்துவதற்காக கவனத்தில் கொள்ளாத சந்தர்ப்பம்
· விண்ணப்பதாரியிற்கு வீட்டின் உரிமை இல்லாதிருந்தால்
· விண்ணப்பதாரியிற்கு வசிப்பதற்கு இன்னொரு வீடு இருத்தல்
· வசித்தது வீடல்லாத போது
· கைவிடப்பட்ட வீடு
· சமயஸ்தளம், விற்பனை நிலையம், வியாபார நிலையம், ஓய்வு மண்டபம் என்பன
· அனுமதிக்கப்படாத வதிவிடம்
· வாடகை மற்றும் குத்தகை வீடு என்னும் போது
· எவர் ஒருவரினால் நட்டம் விழைவிக்கப்பட்ட வீடு
· காவற் கூடம் அல்லது காவல் வீடு
· அழிவு ஏற்பட்டு 6 மாத்ததினுள் அறிவிக்கப்படாத போது
உதவித் தொகை செலுத்தும் நடைமுறைச் சட்டம்
i. அழிவு ஏற்பட்டவர் அது பற்றி தமது பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தருக்கு அறிவித்தல் (தீயினால் ஏற்பட்ட அழிவாயின் பொலிஸ் அறிக்கை கட்டாயம் இருத்தல் வேண்டும்)
ii. கிராம உத்தியோகத்தரினால் வ.ப.ச.சே.04 படிவம் மூலம் பிரதேச செயலாளரிடத்தில் அறிவித்தல்
iii. பிரதேச செயலாளரினால் சமூக சேவை உத்தியோகத்தரின் சிபாரிசிற்காக உரிய படிவத்தினை அவருக்கு பொறுப்படைத்தல்
iv. சமூக சேவை உத்தியோகத்தர் உரிய இடத்தை பரிசீலித்து நட்டம் பற்றி தமது மதிப்பீட்டுடன் உரிய சிபாரிசினை பிரதேச செயலாளருக்கு சமர்பித்தல்
v. பிரதேச செயலாளரின் சிபாரிசினை பெற்றுக் கொண்டு உரிய படிவத்தினை மாகாண சமூக சேவை திணைக்களத்திற்கு அனுப்புதல்
vi. சமூக சேவை மாகாண பணிப்பாளர் அந்த அறிக்கையினை நிலைய சமூக சேவை உத்தியோகத்தரிற்கு உரிய இடத்தினை பரிசீலிப்பதற்கு முன்வைத்தல். மதிப்பீட்டின் பெறுமதிப் படி இது தொடரந்திருக்கும்.
vii. நிலைய சமூக சேவை உத்தியோகத்தரின் சிபாரிசு உரிய இடத்தினை பரிசீலித்த பின் சமூக சேவை மாகாண பணிப்பாளரிற்கு பெற்றுக் கொடுத்தல்.
viii. சமூக சேவை மாகாண பணிப்பாளர் செலுத்தும் தொகையினை அனுமதித்தல்
ix. விடயப் பொறுப்புடைய உத்தியோகத்தருக்கு அனுப்புதல். அவரினால் அனுமதிக்கப்பட்ட தொகைக்காக வ.ப.ச.சே.09 படிவத்தில் வவுச்சர் பத்திரமும் பொது 143 படிவத்தினை கொண்டுவருதலும் காசோலையினையும் தயார்படுத்தி பிரதேச செயலாகத்திற்கு அனுப்புதல்.
x. பிரதேச செயலாகத்தினால் காசோலை கிடைத்தது பற்றி பணம் பொறுப்பேற்கும் பற்றுச் சீட்டினை மாகாண சமூக சேவை திணைக்களத்திற்கு அனுப்புதல்/ பற்றுச் சீட்டு கிடைக்காதுவிடின் திருப்பிப் பெற்றுக் கொள்ளல் (மாகாண அலுவலகத்தினால்)
xi. கிடைத்த உதவி தொகைப் பற்றி ச.சே.உ. அறிவுறுத்தலும் ஆவணத்தில் பதித்தல்
xii. உதவித் தொகைப் பெறுபவருக்கு பணம் கிடைத்தது பற்றி அறிவித்து தனது அடையாளத்தினை உறுதிப்படுத்திக் கொண்டு பணம் செலுத்தல். (பிரதேச செயலாகத்தினால்)
xiii. பணம் செலுத்தியபின் வவுச்சர் பத்திரம் ஒரு வாரத்தினுள் மாகாண சமூக சேவை திணைக்களத்திற்கு அனுப்புதல்/ வவுச்சர் கிடைக்காதுவிடின் திருப்பிப் பெற்றுக் கொள்ளல் (மாகாண அலுவலகத்தினால்)
xiv. உரிய பணத்தினால் அழிவிற்குற்பட்ட வீட்டினை புணரமைப்பதா என்று ச.சே.உ. கவனமாக இருத்தல் வேண்டும். அவ்வாறு செய்யாது விடின் செலுத்தப்பட்ட தொகை உடனடியாக மீள் செலுத்துமாறு உரியவர்களுக்கு அறிவித்தல் வேண்டும். வேறு உதவித் தொகைக்காக அவர்களை கவனத்தில் கொள்ளமாட்டாது.
xv. தவணை முறையில் செலுத்தப்படும் சந்தர்ப்பத்தில் பெற்றுக் கொடுக்கப்பட்ட தவணையில் முடிக்கப்பட்ட வேலைப் பற்றி திருப்தியடையுவதாயின் மாத்திரம் இரண்டாம், மூன்றாம் தவணை செலுத்துவதற்காக ச.சே.உ. தமது சிபாரிசினை பிரதேச செயலாளருக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.
xvi. பெற்றுக் கொடுக்கப்பட்ட தவணையினால் திருப்தியடையும் வகையில் வேலைகளை முடித்து அல்லது குறைந்த பட்சம் கட்டிடப் பொருளையாவது பெற்றுக் கொள்ளாது விடின் மீதி தவணைகளை செலுத்துவதற்காக சிபாரிசு செய்யப்படமாட்டாது.
xvii. இரண்டாம், மூன்றாம் தவணை செலுத்துவதற்காக ச.சே.உ. தமது சிபாரிசின் படி வ.ப.ச.சே.09 படிவத்தில் வவுச்சர் பத்திரமும் பொது 143 படிவத்தினை பிரதேச செயலாளரினால் தமது சிபாரிசுடன் ச.சே.மா. பணிப்பாளருக்கு அனுப்புதல்.
xviii. மாகாண சமூக சேவை பணிப்பாளர் செலுத்தும் நிதியினை அனுமதித்தலும் காசோலைகளை உரிய பிரதேச செயலகங்களுக்கு அனுப்புதல்.
xix. மற்றைய காரணங்கள் மேற்கூறப்பட்ட x, xi, xii, xiii சமமானதாகும்.
காட்டு யானைகளினால் பயிர்களுக்கு ஏற்படும் அழிவிற்கு உதவு வழங்கள்
காட்டு யானைகளினால் பயிர்களுக்கு ஏற்படும் அழிவிற்காக உதவித் தொகை செலுத்துவதினை கவனத்தில் கொள்ள முடிந்தது உரிய விவசாயம் விண்ணப்பதாரியின் வாழ்வாதாரத்திற்குரிய தொழிலாக இருப்பினும் மீதி உள்ள விவசாயமும் அவரின் மற்றைய வருமானம் அடுத்த தவணையில் பயிரிடும் வரையில் தங்கி வாழ்வதற்கு போதியாளவு இல்லாதென்றால் மாத்திரமேயாகும்.
· காட்டு யானைகளினால் அழிக்கின்ற உணவு பயிர்களுக்காக 20000.00 ரூபா உச்ச அளவிற்குற்பட்டு ஒரு ஏக்கரிற்காக உதவித் தொகை செலுத்த கவனத்தில் எடுக்கப்படும்.
· காட்டு யானைகளினால் அழிக்கின்ற உணவு பயிர்களுக்காக உதவித் தொகைக்கு தேவையான ஒதுக்கீடு மாவட்ட செயலாளர் ஊடாக் கொழும்பு 03. காலி வீதியில் இலக்கம் 189 இல் அமைந்துள்ள இடர் உதவிச் சேவை அமைச்சினால் பெற்றுக் கொள்ளலாம்.
உதவி பெறுவதற்கான தகைமை
· விண்ணப்பதாரியிற்கு சட்டரீதியாக உரிமை உள்ள விவசாயமாக இருத்தல் வேண்டும்.
· தற்போதைய காப்புறுதி திட்டத்தின் கீழ் பாதுகாக்க முடியாத விவசாயம்
· சிறு பயிர் மற்றும் வேறு பொருளாதார பயிர்கள் என்று
· அழிவு மிக மோசமாயின் மற்றும் உதவி வழங்காது போனால் அநாதை நிலைக்கு உற்படுவதற்கு ஏற்படும் என்ற சந்தர்ப்பத்தில்
· 3000.00 ரூபாவிற்கு குறைந்த வருமானம் பெறுபவராதல் (பொது நிதி உதவி பெறுவதற்கு தகுதியுள்ள)
· தனி உரிமை உள்ள காணி உரிமையாள விவசாயிகள்
· இதற்கு முன் காட்டு யானையின் அழிவினால் நட்டஈட்டிற்கு விண்ணப்பித்திராதவர்கள் (உதவி செலுத்துவதற்காக கவனத்தில் கொள்வது ஒரு ஏக்கரிற்கு மேற்பட்டிருந்தால் மாத்திரமேயாகும்)
உதவி பெற்றுக் கொள்ளும் முறை
i. காட்டு யானையினால் செய்யப்பட்ட விவசாயம் அழிவுப் பற்றிய விபரம் அழிவு ஏற்பட்டு 48 மணித்தியாலயத்தினுள் பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தரிற்கு அறிவித்தல்
ii. கிராம உத்தியோகத்தரினால் காட்டு யானையினால் ஏற்பட்ட அழிவுக்கான உதவி கோரும் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து அவரின் சிபாரிசுடன் பிரதேச செயலாளருக்கு அனுப்புதல்.
iii. பிரதேச செயலாளரினால் விவசாய உத்தியோகத்தர் அறிக்கையினை கோரல்
iv. அதன் பின் அந்த அறிக்கையினை சிபாரிசிற்காக சமூக சேவை உத்தியோகத்தருக்கு அனுப்புதல்
v. சமூக சேவை உத்தியோகத்தர் பரிசீலித்து சிபாரிசு செய்த பின் பிரதேச செயலாளர் சிபாரிசு செய்தல்(அழிவு பாரதூரமாயின் பிரதேச செயலாளரின் தனிப்பட்ட மேற்பார்வை)
vi. அதன் பின் அந்த விண்ணப்பப் படிவம் மாகாண சமூக சேவை பணிப்பாளரிற்கு அனுப்புதல்.
vii. மாகாண சமூக சேவை பணிப்பாளரினால் அறிக்கையுடனான அழிவின் மதிப்பீட்டின் படி தேவையாயின் நிலைய சமூக சேவை உத்தியோகத்தருக்கு சிபாரிசிற்காக அனுப்புதல்
viii. நிலைய சமூக சேவை உத்தியோகத்தரின் சிபாரிசு கிடைத்த பின்/ அறிக்கையுடனான அழிவின் மதிப்பீட்டின் படி சமூக சேவை மாகாண பணிப்பாளரினால் உரிய விண்ணப்பப் படிவத்தை அனுமதித்தல்.
அமைய உதவித் தொகை செலுத்துவதன் கீழ் காட்டப்பட்டுள்ள ix, x, xi, xii செயற் திட்டத்திற்கு உரியதாகும்.
காட்டு யானைகளினால் அழிக்கப்பட்ட வீடு, சொத்து மற்றும் காட்டு யானைகளினால் ஏற்படும் தாக்குதலினால் உயிரிழப்பு மற்றும் பலகீனம் சம்பந்தமாக அமைச்சுக் குழுவின் அறிவித்தல் இலக்கம் 025/2004 இன் கீழ் வன விலங்கு பாதுகாப்புத் திணைக்களம் நடவடிக்கை எடுக்கின்றது.
1967 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட விவசாயத்திற்கு காட்டு மிருகங்களினால் ஏற்படும் அழிவு காரணமாக ஏற்படும் இடரின் போது வழங்கப்படும் உதவியினை நிருவகிப்பதற்கான கட்டளையும் பினபு வெளியிடப்பட்ட கட்டளையின் படி.
வீட்டு உதவி
i. வீடு அழிவு ஏற்பட்டுள்ளதென உறுதிப்படுத்தப்பட்டிருத்தல்
(பொலிஸ் அறிக்கை, மின்சாரக் கட்டணப் பத்திரம்)
ii. வீட்டின் உரிமை விண்ணப்பதாரிக்கு உரித்தென்று உறுதிப்படுத்தல்.
iii. நிரந்தர வதிவிடம் என்று அல்லது வதிவிடத்தோடு சிறு வியாபார நிலையம் என்பதனை உறுதிப்படுத்தல்.
iv. நட்டத்தின் அளவிற்கேற்ப கொடுப்பனவு வழங்குவதென்று.
v. கொடுப்பனவின் உச்ச வரம்பு 20000.00 ரூபாவாகும்.
vi. குடும்பத்தின் மாதாந்த வருமானம் 5000.00 ரூபாவிற்கு குறைந்தவர்களுக்கு பின்னர் கவனத்தில் எடுக்கப்படும்.
உயிருக்காக
· உரிய உயிர் இழப்பு ஏற்பட்டிருப்பது மின்சார ஊடுருவலினால் அல்லது மின்னல் தாக்கியதனால் ஏற்பட்டது என்று அல்லது வேறு ஏதாவதொரு தாக்கத்தினால் ஏற்பட்டது என்று வைத்திய அறிக்கையில் / மரணச் சான்றிதழினால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
· இறந்தவரின் வாழ்க்கைத் துணைக்கு அல்லது துணை இல்லாது விடின் பிரதான வாழ்க்கைத் துணைக்கு இறப்புச் சான்றிதழுடன் தமது உறவு முறையினை உறுதிப்படுத்திய பின் இந்த தொகையினை பெற்றுக் கொள்ளலாம்.
செயலற்று போதல்
· மின்னல் தாக்குதல், குண்டு வெடிப்பு காரணமாக முழுமையாகவே செயலற்று போவதனால், ஒரு பக்கம் செயலற்று போவதனால் அல்லது சாதாரண குறைப்பாட்டின் போதும் அது பற்றி வைத்திய அறிக்கையினால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
· வைத்திய அறிக்கையினால் உறுதிப்பட்டவாறு
முழுமையாகவே செயலற்று போவதனால் 80%
ஒரு பக்கம் செயலற்று போவதனால் 50%
சாதாரண குறைப்பாட்டின் போது 25%
வண்ணம் உரியத் மொத்த தொகையில் ஒரு பகுதியினை பாதிக்கப்பட்ட நபருக்கு செலுத்தப்படும்.
இங்கு வடமேல் சமூக நலன்புரி, சிறுவர் நன்னடத்தையும் பாதுகாப்பு, மின்சக்தி, வீடமைப்பும் கட்டமைப்பு அமைச்சின் செயலாளரின் இலக்கம் வமா/5/ஆ/5/5/03, 2004.12.01 ஆந் திகதியுடைய கடிதம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் படிவத்தினை உபயோகத்திற்கு எடுத்து பூர்த்தி செய்து உதவி முறைகளுக்காக பயன்படுத்தப்படும் திட்டங்களை பின்பற்றி விசேட நட்டஈட்டு கமிடியிற்கு முன்வைக்க இயன்ற வகையில் மாகாண சமூக சேவை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
விசேட நட்டஈட்டு கமிட்டி எல்லா மாதத்திலும் மூன்றாம் வாரத்தில் புதன் கிழமையில் கூட்டம் கூடுவதற்கு இருப்பதனால் கிடைக்கும் விண்ணப்பப் படிவங்களை அவசரமாக அனுப்புவதனால் தாமதமின்றி பணம் செலுத்த முடியும்.
விசேட நட்டஈட்டு கமிட்டியின் அனுமதித்த விண்ணப்பப் படிவங்களுக்காக மாகாண சமூக சேவை அலுவலகத்தினூடாக மேலே கூறப்பட்டுள்ளவாறு உரிய வவுச்சர் அல்லது அதனுடனான அட்டையினை பெற்றுக் கொண்ட பின் பணம் செலுத்தப்படும்.
பரவலான இடர்களுக்கான உதவி வழங்கள்
· ஒரே தடவையில் அதிகமானோரின் அன்றாட வாழ்க்கையினை பாதிக்கும் வகையில் இயற்கையான அனர்த்தம் காரணமாக ஏற்படும் நட்டம் பரவலான இடராக கருதப்படும்.
பரவலான இடர்களின் போது வழங்கப்படும் உதவி
1. சமைக்கப்பட்ட உணவு (மூன்று தினங்களுக்கு மாத்திரம்)
2. உலர் உணவு (ஒரு வாரத்திற்கு மாத்திரம்)
3. மரணச்சடங்கிற்கான உதவி (15000.00 ரூபா வரை)
4. சமையலறை உபகரணம் (1000.00 ரூபா வரை)
5. தொழிலுக்கான பொருட்களுக்கான உதவித் தொகை (2500.00 ரூபா வரை)
6. வீட்டிற்கான உதவித் தொகை (20000.00 ரூபா வரை)
மாகாண சமூக சேவை பணிப்பாளரின் 2003/01, 2002.12.31 ஆந் திகதியுடைய சுற்று நிருபத்திற்கமைய செலுத்தப்படும். உதவி செலுத்துவதற்காக தேவையான பணம் மாவட்ட செயலாளரினூடாக கொழும்பு 03. காலி வீதியில் இலக்கம் 189 இல் அமைந்துள்ள இடர் உதவிச் சேவை அமைச்சினால் பெற்றுக் கொள்ளலாம்.
பதிவிறக்கம்