சிரேஸ்ட குடியுரிமையாளர்களுக்கான சேவைகள்

முதியோர்களுகான சேவை

நோக்கம் – தொடர்ந்து அதிகரித்து வரும் வயோதிபர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மிகவும் நல்ல வாழ்க்கை நிலையை பாதுகாப்பதற்காக பங்கேற்றல்.

வழங்கப்படும் சேவைகள் –

· பொது உதவி திட்டத்தினை நடைமுறைப்படுத்தல்

· கண் சத்திர சிகிச்சைக்காக வில்லைகளை வழங்கள்

· விடுதி பாதுகாப்பிற்காக அனுப்புதல்

· இல்லத்திற்காக கொண்டு நடாத்தலும் உதவி நிதியினை வழங்களும்

· கிராமீய முதியோர் கமிட்டியும் பிரதேச சபை மாகாண முதியோர் அதிகார சபையை அமைத்தலும் வழூவூட்டுவதற்கும் பங்கேற்றல், அறிவூட்டல்

· முதியோர் அடையாளட்டை வழங்குதல்

· கண் பிணி ஆய்வும் வைத்திய பிணி ஆய்வும் ஏற்படுத்தல்

· மூக்கு கண்ணாடி வழங்கள்

செயல் திட்டம்

பொது நிதி உதவித்திட்டத்தினை நடைமுறைப்படுத்த

· எவ்வித நிரந்தர வருமானமற்ற 60 வயதிற்கு மேற்பட்ட கவனிப்பாரற்ற, உதவியற்ற ஆண்/பெண் இருபாலாருக்காகவும் மாதாந்த கொடுப்பனவாக பொது நிதி உதவியினைப் பெற்றுக் கொள்ளலாம்.

கண் சத்திர சிகிச்சைக்காக கண் வில்லைகளை வழங்கள்

· அங்கவீனர்களுக்காக உபகரண உதவி வழங்களின் கீழ் காட்டப்பட்டவை இதற்கும் உரித்தாகும்.

விடுதி பாதுகாப்பிற்காக அனுப்புதல்

· எவ்வித நிரந்தர வருமானமற்ற 60 வயதிற்கு மேற்பட்ட கவனிப்பாரற்ற, உதவியற்ற ஆண்/பெண் இருபாலாரும் இதற்காக தகைமை பெறுவர்

· அவ்வாறானவர்களுக்கு வசிக்கும் பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தருக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்க முடியும்.

இல்லத்திற்கு உற்படுத்துவதற்கு உரியவரினதும் குடும்பத்தினதும் விபரங்களுடன் உரிய கோரிக்கையை பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு கிராம உத்தியாகத்தினால் அனுப்பப்படும்.

· தங்களது வேலைகளை தங்களுக்கே செய்துக் கொள்ள முடிந்த, தொற்று நோயினால் அல்லது மன நோயினால் அவதிப்படாதவர்கள் இதற்காக தேர்ந்தெடுக்கப்படுவர்.

· உரிய  கோரிக்கைப் பற்றி ச.சே.உ. தனிப்பட்ட முறையில் பரிசீலித்து வமாசசே 03(2) படிவத்தினால் பிரதேச செயலாளருக்கு அறிவித்தல்.

பிரதேச செயலாளரின் சிபாரிசுடன் உரிய படிவத்தை சமூக சேவை மாகாண பணிப்பாளருக்கு அனுப்புதல். (விடய பொறுப்புள்ள உத்தியோகத்தரினால்)

· விடுதி பாதுகாப்பினை பெற்றுக் கொடுப்பதற்காக வசதியுள்ள இல்லங்களுக்கு அனுப்புதல் சமூக சேவை மாகாண பணிப்பாளர் அலுவலகத்தினால் செய்யப்படும்.

· இல்லங்களுக்குட்படுத்தப்பட்ட பின் பொது நிதி உதவி பெற்றுக் கொண்டிருப்பின் அதனை செலுத்தல் இடைநிறுத்தப்படும்.

இல்லத்திற்காக கொண்டு நடாத்தலும் நிதி உதவி வழங்களும்

· அங்கவீனவர்களுக்கான இல்லத்திற்காக கொண்டு நடாத்தலும் நிதி உதவி வழங்களின் கீழ் உள்ளவை இதற்கும் உரித்தாகும்.

கிராமீய முதியோர் கமிட்டியும் பிரதேச சபை மாகாண முதியோர் அதிகார சபையை அமைத்தலும் வழூவூட்டுவதற்கும் பங்கேற்றல், அறிவூட்டல்

· கிராமீய முதியோர் கமிட்டியை அமைத்தல் பற்றி கிராம            உத்தியோகத்தர்களை அறிவுறுத்தல் (சசேஉ வேலைத்திட்ட உத்தியோகத்தர், பி.செ. ச.சே. மாகாண அலுவலகமும் முதியோர் செயலாளர் அலுவலகத்தினூடாக)

· கிராம உத்தியோகத்தர் மூலம் கிராமீய முதியோர் கமிட்டியை அமைத்தலும் அறிவுருத்தலும்

· செயற்திட்ட கிராமீய முதியோர் கமிட்டிக்காக நிதி உதவி சிபாரிசு செய்தல். (கி.உ. ச.சே.உ. அறிக்கைப்படி பி.செ.னால்) தேசிய முதியோர் செயலாளர் அலுவலகத்தினூடாக)

· பிரதேச, மாகாண முதியோர் அதிகார சபைக்காக நிதி உதவி சிபாரிசு செய்தல்.( ச.சே.உ. அறிக்கைப்படி பி.செ.னால்)

· கிராமீய முதியோர் கமிட்டியும் பிரதேச, முதியோர் அதிகார சபையை அறிவுருத்தல் ( ச.சே.உ. வேலைத்திட்ட உத்தியோகத்தர், பி.செ. ச.சே. மாகாண அலுவலகமும் முதியோர் செயலாளர் அலுவலகத்தினூடாக)

· பிரதேச, மாகாண முதியோர் அதிகார சபை  அமைப்பதற்காக கிராமீய முதியோர் கமிட்டிகளில் உத்தியோகத்தர்களை அறிவுருத்தல்            (வேலைத்திட்ட உத்தியோகத்தர், ச.சே. மாகாண அலுவலகமும் முதியோர் செயலாளர் அலுவலகத்தினூடாக)

முதியோர் அடையாளட்டை வழங்குதல்

· 60 வயதிற்கு மேற்பட்ட  அனைத்து  முதியோர்களும் முதியோர் அடையாளட்டைகளை பெற்றுக் கொள்ள தகுதியுடையோராவார்கள்.

· முதியோர் செயலாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட புகைப்படப் பிடிப்பாளர்களினூடாக முதியோர் அடையாளட்டைக்காக புகைப்படம் எடுக்க முடியும் என்பதுடன் புகைப்படமும் முதியோர் அடையாளட்டையும் இலவசமாக வழங்கப்படும்.

· கிராமீய முதியோர் கமிட்டிகளில் அங்கத்தவர்களுக்காக ச.சே.உ. மூலம் நடமாடும் சேவைகளை ஏற்பாடு செய்துக் கொள்ள முடியும்.

கண் பிணி ஆய்வும் வைத்திய பிணி ஆய்வும் ஏற்படுத்தல்

· கிராமீய முதியோர் கமிட்டிகளில் மாதாந்த வருமானம் 2000.00 ரூபாவிற்கு குறைவாக பெறும் அங்கத்தவர்களுக்காக கண் பிணி ஆய்வு நடாத்தப்படுவதற்காக ச.சே.உ. மூலம் நடமாடும் சேவைகளை ஏற்பாடு செய்துக் கொள்ள முடியும்.

· கண் பிணி ஆய்வின் போது கண் பரிசீலித்த பின் மூக்கு கண்ணாடி வழங்கப்படும்.

· வைத்தியசாலைகளில் கண் பிணி ஆய்வினால் கண்ணை பரிசீலித்து வழங்கப்படும் அட்டவணையின் படியும் மூக்கு கண்ணாடி வழங்கப்படும்.

· கிராமீய முதியோர் கமிட்டிகளின் அங்கத்தவர்களுக்காக மருத்துவ அறிவுரை நடாத்துவதற்காக ச.சே.உ. மூலம் நடமாடும் சேவைகளை ஏற்பாடு செய்துக் கொள்ள முடியும்.

மூக்கு கண்ணாடி வழங்கள்.

அங்கவீனவர்களுக்கான உபகரண உதவி வழங்களின் கீழ் காட்டப்பட்டுள்ள செயற் திட்டம் இதற்கு பொறுந்தும்.

 

பதிவிறக்கம்

 

  1. Application 33
  2. Application 34
  3. Application 35
  4. Application 36

 

Last Update :-

1st Jan 2023