வீட்டு வசதி உதவி
உதவி வேலைத்திட்டம்
உதவியற்ற இல்ல உதவி வேலைத்திட்டம் சமூக சேவை திணைக்களம் – வடமேல்
நோக்கம் – எவ்வித உதவியுமற்றவர்கள் உதவியற்ற இல்லமற்ற குடுபங்களுக்காக வீட்டு உதவித் தொகை 25000.00 ரூபா பெற்றுக் கொடுப்பதனால் அவர்கள் நிரந்தர வீட்டுரிமையாளராக மாறுவதனால் அவர்களின் வாழ்க்கைத் தரம் நற்பண்பு சார்ந்த உயர் தரத்திற்கு கொண்டு வருதல். அதனால் அவர்களை நாட்டின் அங்கத்துவ நிலைக்கு மாற்றுதல்.
1. வீட்டு உதவி பெறுவதற்கான தேவையான தகைமைகள்
1. விண்ணப்பதாயின் பெயரில் காணி இருத்தல்
2. மாதாந்த வருமானம் 5000.00 ரூபாவிற்கு குறைந்த
3. கணவன் இல்லாத விதவையாக இருத்தல்/பாடசாலை செல்லும் வயதில் பிள்ளைகள் இருவருக்கு மேல் இருத்தல்
4. எவ்வித உதவியும் அற்ற குடும்பமாக இருத்தல்
5. பொது நிதி உதவி பெறுபவராக இருத்தல்
6. பொது பங்களிப்பு பெற்றுக் கொள்ள முடியுமாயிருத்தல்
7. இந்த தொகையினை உபயோகித்து நிரந்தர வீடொன்றினை கட்டி எழுப்ப முடியுமாக இருத்தல்
2. வீட்டு உதவி விண்ணப்பப் படிவம் வழங்கள்
1. விடயப் பொறுப்புடைய கௌரவ அமைச்சர்
2. சமூக சேவை மாகாண பணிப்பாளர் மூலம்
3. உதவி பெறுவதற்கான விண்ணப்பப் படிவதுடன் சமர்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்.
1. விண்ணப்பதாரியின் கோரிக்கை கடிதம் (கிராம உத்தியோகத்தரின் சிபாரிசுடன்)
2. காணியின் உரிமையை உறுதிப்படுத்துவதற்காக உறுதிப் பத்திரத்தின் /அத்தாட்சிப் பத்திரத்தின் பிரதி அல்லது உரிமையை உறுதிப்படுத்துவதற்காக எழுத்து மூல அறிவித்தல்.
3. 5000.00 ரூபா வருமானமுள்ளவர் என்பதற்கான சான்று
4. பொது நிதி/நோய்க்கான உதவி மற்றும் வேறு நோய்கான உதவி பெறுவதாயின் அதனை உறுதிப்படுத்துவதற்கான கொடுப்பனவு சான்றிதழ் (அட்டை) நிழற் பிரதி
5. பொது பங்களிப்பினை பெற்றுக் கொள்ளல் பற்றிய எழுத்து மூல அறிவித்தல்.
6. வீட்டின் மதிப்பீடு
7. வீட்டின் திட்டம்
4. தவணைத் தொகையினை விடுவித்தல்
1 ஆம் தவணை – 10,000.00 வும் விண்ணப்பப்படிவமும் உரிய ஆவணமும் பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு சமர்பித்த பின் சமூக சேவை உத்தியோகத்தரினால் உரிய இடத்தை அவதானித்ததன் பின் ச.கே.உ. சிபாரிசின் பின் சமூக சேவை மாகாண பணிப்பாளரிடத்தில் சமர்பித்த பின்பு உரிய உதவித் தொகை அனுமதித்த பின் செலுத்தப்படும்.
11 ஆம் தவணை –முதலாவது தவணை கிடைத்த பின் வீட்டின் கட்டமைப்பு யன்னல் மட்டம் வரை வீட்டின் வேலை முடிந்த பின்பு உரிய பிரதேச செயலாளர் அலுவலகத்திபிரதேச செயலாளர் அலுவலகத்தின் பிரதேச செயலாளரினால் எழுத்து மூல கோரிக்கை விடுக்கப்பட்ட பின்பு சமூக சேவை உத்தியோகத்தரினால் உரிய இடத்தை அவதானித்ததன் பின் சமூக சேவை உத்தியோகத்தரினதும் பிரதேச செயலாளரினதும் சிபாரிசின் பின் மாகாண பணிப்பாளரின் அனுமதியின் பின் பிரதேச செயலாளரிடத்தில் காசோலை மூலம் பணம் பெற்றுக் கொடுக்கப்படும். பிரதேச செயலாளரினால் உரிய நபருக்கு உரிய தொகையினை பெற்றுக் கொடுக்கப்படும்.
111 ஆம் தவணை – 111 ஆம் தவணை செலுத்துவது 11 ஆம் தவணையை பெற்றுக் கொண்டு கூரை வரையில் கட்டி முடிக்கப்பட்ட பின் உதவி பெறுபவரினால் பிரதேச செயலாளரின் எழுத்து மூலம் கோரிக்கைவிடுக்கப்பட்ட பின் சமூக சேவை உத்தியோகத்தர் மூலம் உரிய இடத்தை அவதானிப்பினால் சமூக சேவை உத்தியோகத்தரினதும் பிரதேச செயலாளரினதும் சிபாரிசின் பின் சமூக சேவை மாகாண பணிப்பாளரிடத்தில் கிடைத்த பின் சமூக சேவை மாகாண பணிப்பாளரின் அனுமதியின் பின் பிரதேச செயலாளரிடத்தில் காசோலை மூலம் பணம் பெற்றுக் கொடுக்கப்படும். பிரதேச செயலாளரினால் உரிய நபருக்கு உரிய தொகையினை பெற்றுக் கொடுக்கப்படும்.
பதிவிறக்கம்
- Application 15
- Application 16
- Application 17
- Application 18
- Application 19
- Application 20
- Application 21
- Application 22